Published : 30 Apr 2015 04:54 PM
Last Updated : 30 Apr 2015 04:54 PM

தோனி எப்போதும் ரிஸ்க் எடுப்பதில்லை: இளங்கோவன்

செய்தி:>கேட்ச் பிடிக்க முற்படாத தோனி: நெஹ்ராவின் இரு அனுபவம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் இளங்கோவன் கருத்து:

டோனி தற்போது என்றில்லை, எப்போதுமே விக்கெட் கீப்பிங்கில் ரிஸ்க் எடுப்பதில்லை. வழக்கமான இந்திய விக்கெட் கீப்பர்களைவிட டோனி உயரமானவர். ஆனால் இவர் எப்போதுமே இரண்டாவது ஸ்லிப்பிற்குப் பதிலாக முதல் ஸ்லிப்பில் பீல்டர்களை தனக்கு துணைக்கு நிறுத்திக் கொள்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பந்துகளை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப நகரும் பழக்கமும் இல்லாததால் வைடுகளை பிடிக்காமல் பவுண்டரிகளாக்குகிறார். மற்ற கீப்பர்களைப் போல் டைவ் அடித்து தவறவிட்டு கெட்ட பெயர் எடுப்பதற்குப் பதிலாக, புத்திசாலித்தனமாக தன்னால் உறுதியாக பிடிக்க முடியும் எனத் தெரிந்த கேட்ச்களுக்கு மட்டுமே முயற்சித்து பிடித்து நல்ல கீப்பர் எனப் பெயர் வாங்குகிறார்.

டோனி ஒரு நல்ல கேப்டன் மற்றும் பின்வரிசையில் பயன்படும் ஒரு பேட்ஸ்மேன். ஆனால் இந்தியாவில் நயன் மோங்கியாவிற்குப் பிறகு ஓரளவிற்கு நல்ல கீப்பரென்றால் அது தினேஷ் கார்த்திக் மற்றும் பார்த்திவ் படேல் தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x