Published : 10 Aug 2017 08:42 AM
Last Updated : 10 Aug 2017 08:42 AM

கர்நாடக விவசாயிகளுக்கு காவிரி நீர் திறப்பு

கர்நாடக விவசாயிகளின் பாசன தேவைக்காக கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து இன்று முதல் காவிரி நீர் திறக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கடந்த இரு மாதங்களாக கர்நாடக மாநில விவசாய சங்கத் தினரும், கன்னட அமைப்பினரும் மைசூரு, மண்டியா மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கு காவிரி நீரை திறக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்துக்கு காவிரி நீர் திறக் கப்பட்டதை கண்டித்தும் போராட் டம் தொடர்ந்து வருகிறது. இத னால் மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவிரி விவ காரம் தொடர்பாக விவாதிப் பதற்காக முதல்வர் சித்தரா மையா தலைமையில் நேற்று பெங்களூருவில் கர்நாடக அமைச் சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், வேளாண்மை துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது தமிழக, கர்நாடக விவசாயி களின் தேவைக்காக கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய அணைகளை திறப்பது தொடர்பாக விவாதிக் கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து முதல்வர் சித்தராமையா, ‘‘கர்நாடகாவில் கடந்த ஆண்டை காட்டிலும் குறை வாகவே பருவ மழை பெய்திருக் கிறது. இதனால் கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய அணைகள் இன்னும் முழுக் கொள்ளளவை எட்டவில்லை. இதே நிலை நீடித்தால் வறட்சி காலங்களில் பெங்களூரு, மைசூரு ஆகிய மாநகர மக்கள் குடிநீரின்றி தவிக்க நேரிடும். எனவே தமிழகத்துக்கு தேவை யான நீரை விட முடியாத நிலை ஏற்பட்டுள்ள‌து.

கர்நாடக விவசாயிகளுக்கு பாசனத்துக்கு தேவையான நீரை யும் திறக்க முடியாது. மைசூரு, மண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணராஜ சாகர்,கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் இருந்து வியாழக்கிழமை முதல் காவிரி நீர் திறந்துவிடப்படும். அணைகளில் நீர் குறைவாக இருப்பதால் விவசாயிகள், அதிக மாக நீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டாம். குறைந்த அளவில் நீரை கிரகிக் கும் பயிர்களை மட்டுமே சாகு படி செய்யுங்கள். காவிரி விவ காரத்தில் எதிர்க்கட்சியினரும், சில அமைப்பினரும் அரசியல் செய் யக்கூடாது''என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x