Published : 05 Jul 2017 08:35 am

Updated : 11 Jul 2017 17:33 pm

 

Published : 05 Jul 2017 08:35 AM
Last Updated : 11 Jul 2017 05:33 PM

இவர் ஃபெரோஸ்கான்..

என்னதான் ருசிக்கச் சமைச்சாலும் பணக்காரங்க தட்டுக்குப் போறப்ப அதுல கொஞ்சம் குப்பைக் குப் போகத்தான் செய்யும். ஆனா இவங்க, நான் கொடுக்கிற சாப்பாட்டுல இருக்கிற ஒவ்வொரு பருக்கையையும் ரசிச்சு ருசிச்சுச் சாப்பிடுறத பார்க்கும்போதுதான் சார் எனக்கே சாப்பாட்டோட அருமை தெரியுது.’’ நெகிழ்ந்து போய் சொல்கிறார் ஃபெரோஸ்கான்.

பிரியாணி ஸ்பெஷலிஸ்ட், லட்டு ஸ்பெஷ லிஸ்ட், செட்டிநாடு சமையல் கிங் - இப்படி விதவிதமான சமையலர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம். ‘ஆதரவற்றோர் சமையல்காரர்’ கேள்விப்பட்டிருக் கிறீர்களா? மதுரை மக்கள் நம்ம ஃபெரோஸ்கானுக்கு இப்படித்தான் அடைமொழி தருகிறார்கள். ஏனென்றால், இவர் செய்யும் அன்ன சேவை அப்படி.

ஆதரவற்றோருக்கு அமுது

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ஃபெரோஸ்கான், மதுரை ஏரியாவில் இருக்கும் பெரும்பாலான ஆதரவற்றோர், முதியோர் இல்லத்து வாசிகளின் செல்லப் பிள்ளை. சொந்தப் பிள்ளைகளால் கைவிடப் பட்டோருக்குத் தத்துப் பிள்ளை. ஆதரவற்றோர் மீது அளவுகடந்த பாசத்தை காட்டும் இவர், கடந்த பத்து வருடங்களாக, தான் சமைத்த உணவைக் கொண்டு ஆதரவற்றோருக்கு அமுது படைத்துக் கொண் டிருக்கிறார்.

வெறும் 400 ரூபாயைக் கையில் கொடுத்து, ‘அண்ணே, கடச்சனேந்தல் முதியோர் இல்லத் துல இருக்கிற 20 பேருக்கு காலையில டிபன் செஞ்சி கொடுத்துடுங்க’ என்று சொன்னால் போதும், மறுவார்த்தை பேசாமல் பணத்தை வாங்கிக் கொள்வார் ஃபெரோஸ்கான். மறு நாளே, இட்லி, வடை, 2 வகை சட்னி, மணக்க மணக்க சாம்பாருடன் காலை டிபனை தனது இருசக்கர வாகனத் திலேயே அந்த இல்லத்துக்கு ஹோம் டெலிவரி செய்துவிடுவார்.

இவருக்குள் எப்படி வந்தது இந்த சேவை குணம்? அவரே சொல்கிறார் கேளுங்களேன்.. ’’அப்பா மதுரை வில்லாபுரத்துல டிரை கிளீனர்ஸ் கடை வெச்சிருக்கார். நான் வடை மாஸ்டரா இருக்கேன். பத்து வருசம் முன்னாடி மணிகண்டன், மதிவாணன்னு ரெண்டு பேரு ஞாயித்து கிழமைகள்ல, ரோட்டோரம் இருக்கிற முதியோர்களுக்கு சாப்பாடு பொட்டலம் கொடுத்துட்டு இருந்தாங்க. ஒருநாள் என்கிட்ட மொத்தமா வடை வாங்குனவங்க, ‘உங்களுக்கு பூரி போடத் தெரியுமா?’ன்னு கேட்டுட்டு ஆர்டர் குடுத்தாங்க. பூரி போட்டு அவங்க சொன்ன இல்லத்துக்கு கொண்டுட்டுப் போய் அங்கிருந்த வங்களுக்கு குடுத்தேன். என் கையால அதை வாங்கிச் சாப்பிட்ட அந்த மனுஷங்களோட சந்தோஷத்தைப் பார்த்து, எனக்கு கண்ணே கலங்கிப் போச்சு சார்.

பைக்கில் டோர் டெலிவரி

இன்ஷா அல்லா.. அதுக்கப்புறமா, அவங்க என்ன ஆர்டர் குடுத்தாலும், லாபம் பாக்காம சமைச்சிக்குடுக்க ஆரம்பிச்சேன். அதுவே பேராப்போச்சு. மதுரையில இப்ப எந்த ‘இல்லத்’துக்குச் சாப்பாடு போடணும்னாலும் என்னைத்தான் தேடுறாங்க. பெரியவங்க நினைவு நாள், கல்யாண நாள், பிள்ளைகளோட பிறந்த நாள், நல்ல நாள், பெரியநாள்னு குறைஞ்சது மாசத்துக்கு 20, 25 ஆர்டர் வந்திடும். அவங்கவங்க வசதிக்கேற்ப எவ்வளவு ரூபா கொடுத்தாலும், அதுக்கேத்த மாதிரியான உணவு களை தரமா சமைச்சி டோர் டெலிவரி பண்ணிடுவேன். எதிர்பாராத விதமாக சிலநேரங்கள்ல கூடுதல் செலவு பிடிச்சிடும். இல்லாதவங்களுக்குத்தானேன்னு நெனச்சு கூடுதல் செலவை என் கையிலருந்தே போட்டுச் சமாளிச்சுக்குவேன்’’ உள்ளார்ந்த ஆத்ம திருப்தியுடன் சொல்கிறார் ஃபெரோஸ்கான்.


இவர் ஃபெரோஸ்கான்ஆதரவற்றோர்மதுரைஉணவு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author