Published : 05 Dec 2018 08:44 AM
Last Updated : 05 Dec 2018 08:44 AM

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம்; டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு 

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் மீது நேற்று டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக டிடிவி தினகரன், டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் இதுதொடர்பாக டிடிவி தினகரன் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார் ஜூனா, பி.குமார், நாது சிங், புல்கிட் குந்திரா, லலித்குமார், ஜெய் விக்ரம்ஹரன், நரேந்திர ஜெயின் ஆகிய 9 பேர் மீது கூட்டுச்சதி, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சாட்சிகளை கலைக்க முற்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்திருந்தார் தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் அவரை விடுவிக்க முடியாது என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றச் சாட்டு பதிவுக்காக டிடிவி தினகரன் நேற்று டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத் தில் நீதிபதி அருண் பரத்வாஜ் முன்பாக ஆஜரானார். குற்றச்சாட்டு பதிவு தொடர்பான ஆவணங்களில் தினகரன் கையெழுத்திட்ட தும், குற்றச்சாட்டுகளின் நகல்கள் தினகரனி டம் வழங்கப்பட்டன. இந்த வழக்கில் வரும் டிச.17 முதல் சாட்சி விசாரணை தொடங்கும் என நீதிபதி அறிவித்து விசாரணையை தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x