Published : 21 Oct 2016 01:10 PM
Last Updated : 21 Oct 2016 01:10 PM

குழந்தைகளின் வேதனை

இமையத்தின், ‘எதற்காக இப்படி ஓடுகிறோம்?’ கட்டுரை மிகவும் அருமை. நானும் ஓர் மழலையர் பள்ளியில் தாளாளராக இருந்து இருக்கின்றேன். இது போன்ற ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தவோ, மாணவர்களுக்குக் கழிப்பறை செல்லும் வாய்ப்பை கொடுக்கவோ இல்லையே என்று கட்டுரையைப் படித்த பின்னர் உணர்கிறேன். இக்கட்டுரையில் உள்ள ஒவ்வொன்றும் உண்மை. எங்கள் ஊர் அருகில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று வரை போதிய கழிவறை வசதிகள் இல்லை. இருக்கின்ற கழிவறைகளும் சரியாகப் பராமரிக்கப்படாததால், பல மாணவிகள் தங்களின் இயற் கைக் கடனை கழிக்காமலேயே வீட்டுக்குச் செல்கிறார்கள். இது போன்ற விழிப்புணர்வு கட்டுரைகளைக் கல்வி சார்ந்த அதிகாரிகளும், ஆசிரியர்களும் அவசியம் படித்து குறைகளைக் களைய முன்வர வேண்டும்.

-எம்.கபார், பேரூராட்சி உறுப்பினர், மதுக்கூர்.





இமையம் எழுதிய 'எதற்காக இப்படி ஓடுகிறோம்?' கட்டுரை எல்லோரையும் சற்றே சிந்திக்கவைத் திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. குழந்தைகள் தினத்தை பிரம்மாண் டமாய் கொண்டாடும் நாம், உண்மை யில் அவர்களின் நலனில் அக்கறை காட்டுவதில்லை. இது போன்ற அடிப் படை அம்சங்களில் கோட்டை விட்டு விட்டு, வலுவான இந்தியாவை எப்படி உருவாக்க முடியும்? இந்த விஷயத் தில் பெற்றோர், ஆசிரியர்கள் பேசி நல்ல தீர்வு காணவேண்டும். விவே கம் உடையவர்களாகக் குழந்தை களை உருவாக்க எண்ணும் நாம், அவர்களது ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

-ஆர்.விஸ்வநாதன், சென்னை.



சில கேள்விகள்

செவ்வாய் அன்று வெளியான ‘வதந்தி தடுப்பும் ஜனநாயகமும்’ தலையங்கம் படித்தவுடன் மனதில் பல சந்தேகங்கள் எழுந்தன. உண்மைகள் மறைக்கப்படும்போதே வதந்திகள் பரவத் தொடங்கும். வதந்திகளைப் பரப்பியவர் மீது கைது நடவடிக்கைகள் எடுக்கும் தமிழக காவல்துறை, உண்மைகளை மறைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன்?

-எஸ்.எரோணிமுஸ், திருச்சி.



சீசன் பிரச்சினையல்ல!

ஆம்னி பஸ் கட்டண விவகாரம் நீதிமன்றப் படியேறியிருக்கிறது. பண்டிகைக் காலத்தில் மட்டும் இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதும், அரசு சார்பில் தற்காலிக நடவடிக்கைகள் எடுத்துச் சமாளிப்பதும், பிறகு துளியும் இதைப் பற்றி கண்டுகொள்ளாதிருப்பதும் தொடர்கிறது. சில அரசியல்வாதிகள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிலர் மற்றும் சில ஆம்னி உரிமை யாளர்கள் கூட்டுச் சேர்ந்து நடத்து கிற கொள்ளைதான் இது. இந்தக் கூட்டணியை உடைக்காமல், எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது கண்துடைப்பாகவே அமையும்.

-கே.ஜெகநாதன், மின்னஞ்சல் வழியாக...



சிறு ஆறுதல்

போரில் பொதுமக்கள் உடமைகள் சூறையாடப்படுவதும், திட்ட மிட்டு திருடப்படுவதும் உலக அளவில் நடக்கும் கொடூரம். மக்க ளின் வாழ்க்கையை ஊனமாக்கி, எதிர்த்துக் கூட பேசமுடியாத ஏதிலியாக அவர்களை மாற்றுவதும், உளவியல் பாதிப்பை ஏற்படுத்து வதும்தான் போரின் விளைவுகள். அரசுகள் ராணுவத்தின் நடவடிக் கைகள் குறித்து கள்ள மௌனம் காக்கின்றன. இலங்கைக் கப்பற்படை அதிகாரியின் நேரடி சாட்சி நமக்கு மனக்கலக்கத்தை ஏற்படுத்தினாலும், சாட்சி சொல்ல ஒருவராவது இருக்கிறாரே என்பது சிறு ஆறுதல்.

-சு.ராமமூர்த்தி,வேலூர்



நினைவஞ்சலி

காலம் சென்ற ஆர்.கே.சண்முகம் செட்டி குறித்து அவரின் 125 ஆவது பிறந்தநாளில் வெளியான கட்டுரை அருமையான நினைவஞ்சலி. அவர் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட நிதிச் சட்டத்தினால் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாகத் தொடங்கப்பட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் (டிக்) என்ற தொழில் நிதி நிறுவனம் இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

-பி.சரவணகணேசன், திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x