Published : 28 May 2016 09:44 AM
Last Updated : 28 May 2016 09:44 AM

பொது நுழைவுத் தேர்வு

பொது நுழைவுத் தேர்வு தீராத தலைவலியாகத் தொடர்வது வியப்பல்ல. மிகச் சில வாய்ப்புக ளுக்கு மிகப் பலர் போட்டியிடுவதே இதற்குக் காரணம். நுழைவுத் தேர்வு உண்மையான மருத்துவருக்குரிய தகுதியைக் காண உதவாது. இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்துக்கும் குறைவே. இந்தியா முழுமைக்கும் ஒன்றரைக் கோடிக்கும் மேற்பட்டவர் அந்தந்த மாநிலத்தில் நடைபெற்ற 12-ம் வகுப்புத் தேர்வுகளை எதிர்கொண்டுள்ளனர். வெவ்வேறு பாடத் திட்டங்கள். வெவ்வேறு பயிற்றுமொழிகள், கல்வி அளிப்பில் நிலவும் அதிபயங்கரமான வேறுபாடுகள் காரணமாக ஒரு தரப்பினருக்கு அனுகூலம் தரும் பாடத் திட்டத்தில் தேர்வு எழுத நிர்ப்பந்திப் பது சமநீதிக் கோட்பாட்டுக்கு முரண்பட்டது.

தனியார் மருத்துவக் கல்லூரி களில் உள்ள ஊழலைத் தடுக்க இத்தேர்வு உதவாது. சேர்க்கை மட்டுமின்றி சேர்ந்த பின்னும் பல வகைகளில் மாணவர் சுரண்டப்படுவர். தரமற்ற மருத்துவக் கல்விக்கு அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகமானது. நடுவணரசின் கட்டுப்பாட்டில் நடைபெறும் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தனித் தேர்வுமுறையைப் பின்பற்றலாம். அதற்கெனத் தனிப் பாடத்திட்டம் வகுத்து அதன் அடிப்படையில் தேர்வு எழுத்துவது முறையாகும். நல்ல மருத்துவரை உருவாக்க இந்த அளவு கவனம் செலுத்தும்போது பொறியியல், சட்டம் போன்ற பல தொழிற்படிப்புகளைப் பற்றிக் கவலைப்படாதது வியப்புக்குரியது.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x