Published : 03 Feb 2016 10:37 AM
Last Updated : 03 Feb 2016 10:37 AM

வரவேற்க வேண்டிய விஷயம்!

‘எய்ட்ஸ் நோயை சித்த, யுனானி மருத்துவத்தால் குணப்படுத்துவதாக மக்களை ஏமாற்றினால் சட்டப்படி நடவடிக்கை’ என்ற செய்தியைப் படித்தேன். எய்ட்ஸ் நோயின் தாக்கம் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகின்றன. மத்திய - மாநில அரசுகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டுவரும் விழிப்புணர்வுப் பணிகளுக்கு மிகப் பெரிய தடையாக விளங்குவது ‘எய்ட்ஸ் நோயினை முழுவதும் குணமாக்குகிறோம்’ என்ற விளம்பரங்கள்தான். போலி விளம்பரங்களைக் கண்டு பாதிப்புக்கு உள்ளானவர்கள், தங்களின் பொருளையும் நேரத்தையும் மட்டுமல்ல, உயிரையும் இழந்துள்ளனர்.

இதற்குச் சில நேரங்களில் அரசின் ஆதரவும் இருந்துவந்தது வருத்தத்துக்குரியது. இதை எதிர்த்துப் போராடிய தொண்டு நிறுவனங்கள் அரசுத் துறை நிறுவனங்களால் பந்தாடிய நிகழ்வுகளும் தமிழகத்தில் நடந்துள்ளன. இந்நிலையில், இந்திய மருத்துவ மருந்து உரிமை வழங்கும் மாநில அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர். எம். பிச்சையாகுமாரின் எச்சரிக்கை அறிவிப்பு அனைவரும் மகிழ்ந்து வரவேற்க வேண்டிய விஷயம். இதனை வெறும் அறிவிப்போடு விடாமல், முழுமையாகச் செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- வ.சி.வளவன், சமூக நலச் செயல்பாட்டாளர், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x