Published : 19 Dec 2015 10:42 AM
Last Updated : 19 Dec 2015 10:42 AM

அலட்சியப் போக்குதான் பேரிடர்

‘நூறாண்டு வெள்ளமும் வடிகால் திட்டங்களும்’ கட்டுரை படித்தேன். ஒரு நகரின் உள்கட்டமைப்பு என்பது வடிகால் திட்டத்தையும் உள்ளடக்கியதுதான் என்பதை உணர்த்தியிருக்கிறார் கட்டுரையாளர். நமது அடிப்படைப் பிரச்சினை திட்டம் வகுப்பதில் மட்டுமல்ல.

செயல்நிலைகளின் அனைத்து மட்டங்களிலும் குறுக்கீடுகளும், தாமதங்களும், காகித விதிகளும் பின்னிப்பிணைந்த சிக்கலான நிர்வாகத்தை வைத்திருக்கிறோம். இவ்வருடத்தின் பேரிடர் மழை அல்ல. சென்னைக்கு அதிக மழை பெய்யப்போவதில்லை, வெள்ளம் வரப்போவதில்லை என்ற அலட்சியப் போக்குதான் பேரிடர்.

ஒரு காலத்தில் நீர்நிலைகள் இருந்த இடமெல்லாம் சுவடே தெரியாமல் கட்டிடங்களாக நிற்கும்போதே தெரிகிறது இங்கு இயற்கை நிலைகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மனிதர்கள் சொகுசு வாழ்க்கைக்கு மாறிவிட்டோம் என்று. உள்கட்டமைப்பு என்பது மழைநீர் வடிகால் மட்டுமல்ல; மழை நீர் சேகரிப்பும், மழை நீர் பாதுகாப்பும் ஆகிய மூன்றும்தான்.

- முனைவர் பா.ஜெயந்தி,உதவிப் பேராசிரியர், திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x