Published : 12 Dec 2015 10:47 AM
Last Updated : 12 Dec 2015 10:47 AM

நம்மால் முடியும்

மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துவைத்த அரசாங்கம், அதைக் கடைப்பிடிக்கும் முயற்சியில் இறங்கவில்லை என்பதை டி.எல்.சஞ்சீவிகுமாரின் ‘மழை நீர் சேகரிப்பை மறுத்தல் தகுமோ? கட்டுரை சுளீரெனச் சுட்டிக்காட்டியுள்ளது. இருந்தாலும், மக்களாகிய நாமும் சில வழிமுறைகள் மூலமாக மழை நீரைச் சேமிக்க வேண்டும். அது கண்டிப்பாக முடியும்.

என் அனுபவத்திலிருந்து சிலவற்றைப் பகிர விரும்புகிறேன். வீட்டைச் சுற்றி சிமெண்ட் அல்லது கான்கிரீட் அமைக்காதீர்கள். கட்டிடப் பாதுகாப்புக்கு வேண்டுமானால் அஸ்திவாரத்தை ஒட்டி ஒன்று அல்லது இரண்டு அடி போதுமானது. சுற்றுச்சுவர் வரை சாதாரண மண் தரை இருந்தால் செடிகள், மரங்கள் வளர்க்கலாம். இவை மழை நீரை உறிஞ்சி நிலத்தடிக்கும் அனுப்புகின்றன. மாடியில் இருந்து குழாய்களில் வரும் நீரை மண் தரைகளில் சிறிய பள்ளமோ அல்லது மழைநீர் சேகரிப்பு அமைப்போ வைத்து அதில் விடுங்கள்.

அல்லது மணல் வடிகட்டி மூலம் வடிகட்டி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் (மூடியிடப்பட்ட) விடுங்கள். நிச்சயம் உங்கள் வீட்டு ஆழ்துளைக் கிணற்றில் நீர்மட்டம் உயரும். வறட்சிக் காலங்களில் கவலை இல்லாமல் வாழ இயலும்.

- அரோக் நிர்மெல்ட், ‘தி இந்து’ இணையதளத்தின் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x