Published : 08 Oct 2015 11:12 AM
Last Updated : 08 Oct 2015 11:12 AM

அநீதிக்குத் துணைபோகும் மவுனம்

இந்தியாவில் முற்போக்குச் சிந்தனையாளர்கள் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்படுவதைக் கண்டித்து, எழுத்தாளர் நயன்தாரா சாகல் தனது சாகித்ய அகாடமி விருதைத் திரும்ப ஒப்படைத்திருப்பது மிக முக்கியமான கண்டனக்குரல். தற்போது நடைபெறும் எந்தவொரு மோசமான விஷயத்துக்கும் முறையான பதிலைக் கூறாமல், காங்கிரஸ் ஆட்சியில் இப்படி நடக்கவில்லையா என்று சில உதாரணங்களைக் காட்டுவது சரியல்ல.

தங்கள் தவறுகளை நியாயப்படுத்திக்கொள்ளும் இந்தப் போக்கு, இனியும் இப்படித்தான் நடப்போம் என்று கூறுவதுபோல உள்ளது. முன்னாள் பிரதமர் நேருவுக்கு சேகல் உறவினர் என்பதால், தற்போதைய பாஜக ஆட்சியின் மீது அவர் குறை கூறுவதில் ஆச்சர்யமில்லை என்று கூறுபவர்களுக்குப் பதிலாக அந்தச் செய்தியிலேயே உள்ளது.

அதாவது, 1975-ல் இந்திரா காந்தி அவசரநிலைச் சட்டத்தைக் கொண்டுவந்தபோதும் அதை அவர் எதிர்த்துள்ளார் என்பது அவரின் நடுநிலைத் தன்மைக்கு ஒரு சான்று.

எந்த வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பது அறிவியலுக்கு மட்டுமல்ல; அரசியலுக்கும் பொருந்தும். தமிழகத்தில் திமுக ஆட்சியின்போது மின்பற்றாக்குறை வந்துபோது அதற்காக ஆற்காடு வீராசாமியை வறுத்து எடுத்தன அப்போதைய ஊடகங்களும் வலைதளங்களும். தற்போதும் அந்தப் பிரச்சினை அப்படியேதான் தொடர்கிறது. ஆனால், தற்போதைய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனைப் பற்றி எந்த விமர்சனமும் இல்லை. அதே போன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மவுன சாமியார் எனக் கடுமையாக விமர்சித்த ஊடகங்கள், தற்போது மோடியின் மவுனத்தை அதிகமாக விமர்சிக்கவில்லை. அவரின் உள்நாட்டு மவுனம் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தாகும் என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்?

- வீ. சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

***

சகிக்க முடியாத ஒன்று

நயன்தாரா சேகல் வழியில் சாகித்ய அகாடமி விருதை கவிஞர் அசோக் வாஜ்பாயி சோக் உதறிவிட்டுப் பேசிய கருத்துகள் பாராட்டுக்குரியவை. பேச்சாற்றல் மிகுந்த மோடி சிறுபான்மையினர் மீது அவர் சகாக்கள் ஏற்படுத்தும் தாக்குதல்கள் குறித்தும், அப்பாவி சிறுபான்மையினர் மற்றும் எழுத்தாளர்கள் கொல்லப்படுவது குறித்தும் மவுனம் காப்பது சகிக்க முடியாத ஒன்று.

- தஞ்சை புதியவன்,‘தி இந்து’இணையதளத்தில்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x