Published : 12 Sep 2015 10:46 AM
Last Updated : 12 Sep 2015 10:46 AM

குற்ற உணர்வே இல்லையே

சில நாட்களுக்கு முன்பு மதுவுக்கு அடிமையான எனது நண்பர் ஒருவரிடம் மது அருந்துவதற்கு எதிரான எனது கருத்துகளை முன்வைத்தேன்.

மது அருந்துவது ஒழுக்கக் கேடான செயல் என்று நான் அவரிடம் வாதாடியபோது, “மது அருந்துவது ஒன்றும் தவறில்லை; தவறு செய்யாமல் யாரும் வாழ முடியாது. சிலர் எவ்வளவோ பெரிய தவறுகளைச் செய்கிறார்கள். எனவே, நான் குடிப்பது ஒன்றும் குற்றமில்லை” என்று என் நண்பரும் வாதிட்டார்.

ஒரு சமூகத்தில் தவறுகள் அதிகரிக்கும்போது, இயல்பாகவே எல்லோருடைய மனதிலும் இது ஒன்றும் தவறில்லை என்ற பொதுப்புத்தி ஏற்பட்டுவிடுகிறது என்பதைத்தான் இது உணர்த்துகிறது. இப்பொதுப்புத்தி ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தச் சீரழிவுக்கே வழிவகுக்கும் என்பதே உண்மை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்த்தப்பட்டவர்களே மக்கள் நலனுக்கு ஊறு விளைவிக்கும் செயலைக் கண்மூடித்தனமாகச் செய்வதுதான் வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.

மதிப்பீடுகளை உலகுக்கே முதன்முதலாகக் கற்றுக்கொடுத்த தமிழ்க்குடி இன்று மதுவால் அழிவதைத் தடுப்பதற்கு நாம் ஒவ்வொருவருமே காந்தியவாதி சசிபெருமாளுக்கு இருந்த போராட்ட உணர்வோடு செயல்பட வேண்டும்.

- சு.மூர்த்தி, அமைப்பாளர், மக்களாட்சிக்கான பொதுமேடை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x