Published : 13 Aug 2015 10:53 AM
Last Updated : 13 Aug 2015 10:53 AM

மோடி அதிர்ஷ்டசாலிதான்

ராமச்சந்திர குஹா நாட்டு மக்களின் கவலையையும் எதிர்பார்ப்பையும் ‘யார் அந்தத் தலைவர்’ என்ற கட்டுரை மூலம் மிகத் தெளிவாக விளக்கிவிட்டார்.

மிகவும் சிறப்பாகச் செயல்படும் என்று என்று எதிர்பார்க்கப்பட்ட மோடியின் அரசு மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியிருக்கிறது என்பது மிகவும் சரியான கணிப்பு.

தன்னால் நிறைவேற்ற முடியாத கவர்ச்சி வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்த மோடி அரசு, திறமையற்றவர்களை முக்கிய அமைச்சுப் பதவிகளில் அமர்த்தியதோடல்லாமல், அவர்களில் பெரும்பாலோரின் வெறுப்பு கலந்த மதவாதப் பேச்சுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால்தான் மோடியின் அரசுக்கு இத்தகைய நிலைமை. அதேசமயத்தில், மோடி அரசைக் கட்டுக்குள் வைத்துச் சமாளிக்க எதிர்க்கட்சி வரிசையில் திறமைமிக்க நம்பிக்கைக்குரிய தலைவர் இல்லையென்பது, நமது துரதிர்ஷ்டம்தான்.

சரியான தலைமையின்றி காங்கிரஸ் கட்சி தள்ளாடுகிறது என்பது நிதர்சனம். கட்டுரையாளர் சொல்வதுபோல் இந்திய அரசியலில் மோடிக்கு முக்கியப் போட்டியாளர் ராகுல் காந்திதான் என்றால் உண்மை யிலேயே மோடி அதிர்ஷ்டசாலிதான்.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x