Published : 13 Aug 2015 10:55 AM
Last Updated : 13 Aug 2015 10:55 AM

அற்புதமான கற்றல் கருவி

ஆகச் சிறந்த குழந்தை எழுத்தாளர் எனிட் ப்ளைட்டனை நினைவுகூர்ந்த ராஜலட்சுமி சிவலிங்கத்தின் குறிப்புகள் அருமை.

அவரது நூல்கள் வயதுக்கேற்ற வகையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். நூல் வெளியீட்டாளரும் குழந்தைகளைக் கவரும் வகையில் ஒரு பக்கம் கதையும், எதிர்ப்புறம் படமும் கொண்ட வகையில் நூல்களை அமைத்தனர். நான் ஒரு சிற்றூரில் பணியாற்றும்போதுதான் அந்நூல்கள் இந்தியாவில் கிடைக்கப்பெற்றன.

அவற்றை ஆங்கிலம் கற்பிக்க எங்கள் பள்ளியில் பயன்படுத்தினோம். படத்தைப் பார்த்துக் கதையை அறியவும் எதிர்ப்புறத்தில் அமைந்த எழுத்து வடிவையும் பார்த்து மாணவர்கள் ஆங்கிலச் சொற்கள், வாக்கிய அமைப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும் செய்வார்கள். படத்தை உற்றுப்பார்க்கும் திறனும் பெற்றனர்.

எழுத்து வடிவில் உள்ள சொல்லுக்குப் படத்தைப் பார்த்துப் பொருள் அறிந்தனர். அதி அற்புதமான கற்றல் கருவியாக எனிட் ப்ளைட்டன் நூல்கள் அமைந்தன.

- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x