Published : 15 Jul 2015 10:51 AM
Last Updated : 15 Jul 2015 10:51 AM

‘என் கனவுகளை அங்கீகரித்துவிடுங்கள்

“என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்க முடியாது, அழிப்பது இயல்பு, தோன்றுதல் இயற்கை” என்று உரக்கச் சொன்ன கவிஞர் ஆத்மாநாமின் கவிதைகள் அழமான பொருண்மை மிக்கவை.

மொழி எனும் பெருவெளியில் அலையும் அவர் கவிதை வரிகள், காற்றோடு கலந்து காதோடு பேசுகின்றன. “என் கனவுகளை உடனே அங்கீகரித்துவிடுங்கள், வாழ்ந்துவிட்டுப் போனேன் என்ற நிம்மதியாவது இருக்கும்” என்று சொன்ன ஆத்மாநாம், இயல்பின் வெளிப்பாட்டு ரணத்தில் கவிதைகள் படைத்தார்.

வாசகன் அவர் கவிதைக் கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டு அவரோடு சேர்ந்து அவர் மனம் சுமந்த ரணம் சுமக்கிறான் இன்னும். அவர் பார்வையில் புல்லும் போராட்ட ஆயுதம்தான்.

தொழில்நுட்பம் நம் நாடுகளின் தொலைவினைக் குறைத்து அருகில் நிறுத்தியிருந்தாலும், மனிதர்களின் மனங்களை இன்னும் நெருக்கமாக்க முடியவில்லை என்ற குறை ஆத்மாநாமுக்கு உண்டு. “இருந்தும் இன்னும் ஒருமுறைகூட அண்டை வீட்டானுடன் பேசியதில்லை. என்ற வரிகளில் அந்த உண்மை புரியும். எழுதுங்கள், பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும்” என்று சொன்ன ஆத்மாநாம் குறித்த ‘மொழியின் கனவு கவிதை’ எனும் தலைப்பிலான கலை ஞாயிறு கட்டுரை செறிவாக இருந்தது!

- முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x