Published : 02 Jul 2015 10:58 AM
Last Updated : 02 Jul 2015 10:58 AM

முழு நேர வணிக மையம்

மருத்துவத்தை மக்களுக்கானதாக்குவோம் என்ற மருத்துவர் ரவீந்திரநாத்தின் கட்டுரை மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் என்று எல்லோருடைய சிந்தனையையும் தூண்டி அறம் சார்ந்த வழிமுறைக்கு அடிகோலும் என்று நம்புவோம்.

பாமரன் முதல் படித்தவர் வரை உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவரைத்தான் கடவுளாகப் பார்க்கிறார்கள். ஒரு ஆட்டோக்காரர் பிரசவத்துக்கு இலவசம் என வழங்கும் மனித நேயத்தைக்கூட வழங்காத மருத்துவமனைகள் முழு நேர வணிக மையமாகத்தான் உள்ளன.

மக்களால் மிகவும் மதிக்கப்படும் மருத்துவர்கள், மக்களின் நம்பகத்தன்மையைத் தக்க வைத்துக்கொள்ள வணிகமயமற்ற மனிதநேயம் மிக்க மருத்துவ சேவையை வழங்க வேண்டும்.

- சு. தட்சிணாமூர்த்தி,கோவை.

***

மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத், மருத்துவத் துறை அதன் மாண்புகளை எவ்வாறு இழந்துகொண்டிருக்கிறது என்பதை விரிவாகச் சொல்லியிருக்கிறார். மற்ற சேவைத் துறைகளைப் போல மருத்துவத் துறையிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுபவர்கள் அருகிக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் மருத்துவப் பட்ட மேற்படிப்பு நுழைவுத் தேர்வுகள் எவ்வாறு நடைபெற்றது என்பதையும், அதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையும் நாம் அறிவோம். நெறிமுறைகளையும், விழுமியங்களையும் மீறிய செயல் அல்லவா இது. ஆனாலும் ஏழை எளிய மக்கள், பொது சுகாதாரத் துறையையே நம்பியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்குப் பங்கம் வராமலும் வணிகச் சூழலுக்குப் பலியாகாமலும் பார்த்துக்கொள்வது மருத்துவர்களின் கடமை.

- ரா. பொன்முத்தையா,தூத்துக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x