Published : 24 Feb 2015 10:45 AM
Last Updated : 24 Feb 2015 10:45 AM

இந்தித் திணிப்பு வேண்டாம்

இந்தியின் உண்மை நிலையை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது ‘#இந்திவாழ்க’ கட்டுரை. சந்தை நலப் பொருளாதார நலன்களுக்கு ஏற்ப மொழிகளின் இருப்பு தீர்மானிக்கப்படுவது 300 ஆண்டுகளாக நடைமுறைக் கொள்கையாக இருந்துவருகிறது.

ஒரு நூற்றாண்டாக இக்கொள்கை வேகம் பெற்றுள்ளது. உலகமயம் இதை மேலும் வேகப்படுத்துகிறது.

உலகச் சந்தையின் பரிவர்த்தனைத் தொடர்புகளுக்கு இனி இந்தியும் பயன்படாது. இந்தி-இந்துத்துவக் கொள்கையாளர்களின் இந்துத்துவ விருப்பங்களுக்கு வேண்டுமானால் இந்தி இன்னும் சில காலம் தேவைப்படலாம். இந்துத்துவ விருப்பங்களையெல்லாம் மூட்டை கட்ட வேண்டியதுதான் என்று அமெரிக்க அதிபர் கடந்த மாதம் இந்திய வருகையின்போது அறிவுறுத்திவிட்டுச் சென்றுள்ளதையும் அமெரிக்கா சென்ற பிறகும் மீண்டும் நினைவூட்டியதையும் பாரதப் பிரதமர் மோடி, கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

மேலும், அமெரிக்காவில் கடந்த வாரம் சிவராத்திரி விழாவன்று இந்துக் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் விளைவுதான் “எல்லா மதத்தினரையும் நாம் மதிக்க வேண்டும்” என்று மோடியைப் பேச வைத்திருக்கிறது.

பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் மருத்துவம், பொறியியல் பாடங்களை போஜ்புரி, மைதிலி மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது. பிஹார், உத்தரப் பிரதேசத்தில் இருப்பவர்களுக்கே இந்தியில் படிக்க முடியவில்லை என்பதை உணர்ந்து நமது பிரதமர் மோடி இனிமேலாவது இந்தி மொழித் திணிப்பை நிறுத்திக்கொள்ளலாம்.

- சு. மூர்த்தி,மின்னஞ்சல் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x