Published : 04 Jan 2016 11:56 AM
Last Updated : 04 Jan 2016 11:56 AM

புத்தாண்டின் முத்தான பரிசு!

தமிழ்ப் பத்திரிகைகளில் சமூகம் சார்ந்த பல முன் முயற்சிகளை ‘தி இந்து’ தொடங்கி வெற்றி கண்டுள்ளது. அந்த வகையில் இந்தப் புத்தாண்டு கொண்டாட்டம் அர்த்தமுள்ளதாக, ‘புத்தகப் பரிசுடன் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வோம்’ என்ற நல்ல ஆலோசனையை வழங்கியது. இந்த ஆலோசனையை பலரும் கடைப்பிடித்து மகிழ்ந்தனர். அந்த வகையில் நானும், நான் பணிபுரியும் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் கூராங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்குப் புத்தகங்களை வழங்கிப் புத்தாண்டு வாழ்த்து கூறினேன். இந்தப் புத்தாண்டின் முதல் வேலை நாளில் மாணவர்களுக்குப் புத்தகம் வழங்கிக் கொண்டாடியதில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இந்த ஆலோசனையை வழங்கிய ‘தி இந்து’வுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இந்த முயற்சியை இன்று மட்டுமல்ல என்றும் தொடர்வேன்.

-ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.



***

உண்மையான கொண்டாட்டம்

புத்தகங்களுடன் புத்தாண்டைக் கொண்டாடுவதை ஒரு இயக்க மாக்கிய ‘தி இந்து’வைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. கேளிக்கை விடுதியில் கூத்தடித்து, மது அருந்திவிபத்தில் சிக்கிச் சீரழிவதையே பார்த்துப் பழகிவிட்ட நமக்கு இவ்வகையான கொண்டாட்டம் நம்பிக்கை யைத் தருகிறது. கொண்டாட்டம் என்பது கொண்டாடுவோரை மட்டும் மகிழ்விக்காது கூடியிருந்தவர் களையும் மகிழ்விக்க வேண்டும். அதற்கேற்றபடி இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கும், கவனிக்க வைத்த புத்தகங்களின் பட்டியலை வெளியிட்டதற்கும் நன்றிகள்.

-ப.மணிகண்டபிரபு,திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x