Published : 05 Jun 2018 10:05 AM
Last Updated : 05 Jun 2018 10:05 AM

இப்படிக்கு இவர்கள்: கண் முன்னே அழிக்கப்படும் தூத்துக்குடி

இரா.நல்லகண்ணு,

முதுபெரும் தலைவர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,

சென்னை.

கண் முன்னே அழிக்கப்படும் தூத்துக்குடி

மஸ் எழுதிய ‘தூத்துக்குடி குரல்களின் அர்த்தம் என்ன?’ கட்டுரையை வாசித்தபோது எனக்குப் பழைய ஞாபகங்கள் அத்தனையும் வந்துபோயின. அவர் குறிப்பிடும் தூத்துக்குடியின் முதல் காலகட்டத்தைக் கதைகளாக அறிந்தவன் நான். இரண்டாவது காலகட்டத்தின் மிச்சத்தை நானே பார்த்திருக்கிறேன். மூன்றாவது காலகட்டத்துக்கு நானும் ஒரு சாட்சியம். தூத்துக்குடி நம் கண் முன்னே அழிந்துகொண்டிருக்கிறது. மக்கள் அதை எதிர்த்துதான் போராடுகிறார்கள். மக்களின் உணர்வையும் தூத்துக்குடியிலுள்ள உண்மைச் சூழலையும் புரிந்துகொள்ளாமல் போராடுபவர்களைக் கொச்சைப்படுத்தும் ஒரு போக்கு இன்று உருவாகிவருகிறது. இது ஆபத்தானது. ‘வளர்ச்சி’யின் பெயரால் மண்ணையும் மக்களையும் சூறையாடும் இந்த நவீன தொழில் கொள்கை இனியும் இப்படியே தொடர அனுமதிக்கக் கூடாது. மக்கள் போராட்டங்களுக்குப் பின்னுள்ள எண்ணமும் அதுதான். மக்கள் மீது உண்மையான கரிசனம் இருப்பவர்கள் ‘மக்களை ஏன் போராட்டத்தை நோக்கித் தள்ளுகிறீர்கள்’ என்று ஆட்சியாளர்களைப் பார்த்து கேள்வி கேட்க வேண்டும்.

ந.மார்க்கண்டன்,

காந்தி கிராமப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், கோவை.

சத்தியத்தின் குரல்

தூ

த்துக்குடியினுடைய கடந்த காலத்துடனான நிகழ்கால ஒப்பீடு கண் கலங்க வைத்தது. காந்தியைப் பற்றி அந்தக் கட்டுரையில் குறிப்பு எதுவும் இல்லை. ஆனால், காந்தியத்தின் பார்வையில் எழுதப்பட்ட கட்டுரை அது. அவரது குரல் சத்தியத்தின் குரல்.

பேரா.நா.மணி, மேனாள் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

அரசுப் பள்ளிகளின் அஸ்திவாரம்

சு

தந்திர இந்தியாவில், தமிழக வரலாற்றில் ஒரு பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் உள்ள அனைத்துப் பாடங்களையும் ஒவ்வொரு வரியாகக் கருத்தூன்றிப் படித்துப்பார்த்துச் செப்பனிட்டு வெளிவரும் முதல் பாடநூல்கள் இவை என்பதே ஒரு வரலாறுதான். பாட நூலாக்கத்தில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் புதிய உத்திகள், படைப்பாக்கத் திறனை முடுக்கிவிடும் செயல்பாடுகள், ஏன்.. எப்படி.. எதற்கு என்ற கேள்வி கேட்கும் மனத்துக்கு, ஒவ்வொரு பாடநூலிலும் இடமளித்திருப்பது ஆகியவை வரவேற்புக்குரியன. பள்ளிக் கல்வியில் மாணவர்கள் சந்திக்கும் சமகால சவால்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகள், விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கவும் அதை நம்பியுள்ள குழந்தைகள் வாழ்வு தழைக்கவுமான அஸ்திவாரம்.

ப.ராஜ்குமார், புதுச்சேரி.

கல்வி உலகின் மிகச் சிறந்த மாற்றம்!

பொ

துசுகாதாரம், தொழில்நுட்ப கல்வியறிவில் முதன்மை என நாட்டின் முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழகம், இந்தியத் தேர்வுகளில் கொண்டிருந்த தனது ஏற்றமிகு நிலையை மீண்டும் அடையும் நம்பிக்கையைக் கல்வித் துறைச் செயலர் த.உதயசந்திரன் பேட்டி மூலம் உணர முடிகிறது. தமிழகக் ‘கல்வி உலகின்’ மிகச்சிறந்த மாற்றமாக, பாடத்திட்ட மாற்றம் பொலிவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x