Published : 01 May 2018 09:59 AM
Last Updated : 01 May 2018 09:59 AM

இப்படிக்கு இவர்கள்: துருப்பிடித்த சிந்தனைகளுக்கு எதிர்க் குரல்

சௌந்தர மகாதேவன்,

தமிழ்த் துறைத் தலைவர்,

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,

திருநெல்வேலி.

துருப்பிடித்த

சிந்தனைகளுக்கு எதிர்க் குரல்

ப்ரல் 29 அன்று கலை ஞாயிறு பகுதியில் வெளியான தமிழ்ப் பண்பாடு, நாட்டார் கலை வடிவங்கள், மக்கள் வரலாறு சார்ந்த ஆய்வுகளை முன்னெடுத்துவரும் ஆய்வாளர் ஆ.சிவசுப்ரமணியன் குறித்த ஆதி.வள்ளியப்பனின் கட்டுரை தெளிவாகவும் ஆழமாக வும் அமைந்திருந்தது. மூவாயிரம் ஆண்டு இலக்கியச் செழுமைமிக்க தமிழ்ச் சூழலில் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன், பேராசிரியர் தொ.பரமசிவம், பேராசிரியர் தமிழவன், பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, பேராசிரியர் சிவசு, பேராசிரியர் பஞ்சாங்கம் ஆகியோரின் பங்களிப்புகள் இளைய தலைமுறை ஆய்வாளர்களுக்குத் தடம் அமைத்துத் தருவன.

தமிழின் தொன்மையைக் காக்க சட்டத்தோடும் கலாச்சாரத் தாக்குதல்களோடும் போராட வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில், ஆ.சிவசுப்ரமணியன் போன்றோரின் மக்கள் வரலாறு சார்ந்த களஆய்வுகளும் அதன் பயனாய்த் தமிழ் மண்ணில் விளைந்த நூல்களும் தனித்துவ மான தமிழ்க் கருத்தியலை உருவாக்குவதில் உதவிசெய்கின்றன. ஆய்வுகள் என்ற பெயரில் தமிழில் மலிந்திருக்கும் தொகுப்புகளுக்கு எதிரான போக்கை முன்னெடுத்துவருபவர் ஆ.சிவசுப்ரமணியன். துருப் பிடித்த சிந்தனைகளுக்கு சப்பைக்கட்டு கட்டும் ஆய்வுகளுக்கு எதிரான எதிர்ப்புக் குரலே பேராசிரியர் ஆ.சி.யின் ஆய்வுகள். வ.உ.சி. குறித்த ஆய்வுகள் புதிய செய்திகளை உள்ளடக்கியன. ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் நூல் வரலாற்றாய்வின் முன்மாதிரி. தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும் நூல் தற்கால ஆய்வுகளின் கண்ணாடி.

இஸ்லாம், கிறிஸ்தவம் குறித்த இவரது ஆய்வுகள் நேர்மையானவை. திட்டமிட்டு மத விரோதங்களும் சாதிய வன்முறைகளும் தூண்டிவிடப்படும் நடப்பு நாளில், பேராசிரியரின் ஆய்வுப் பார்வை அனைவரையும் மனிதம் நோக்கித் திரும்பவைக்கும். கலை ஞாயிறு கட்டுரைகள் ஆழமான கருத்தியலோடு வெளிவருவது பாராட்டத்தக்கது.

பொன்விழி, அன்னூர்.

ஐநாவில் எதிரொலிக்கும் காவிரிப் பிரச்சினை

கா

விரி நீர் தமிழகத்துக்குக் கிடைக்க ஐநா மனித உரிமைகள் ஆணையருக்கு வைகோ கடிதம் எழுதியது அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. பிரச்சினையின் மையத்தை விரிவாக விவரித்துள்ளார். எப்படி பாகிஸ்தானுக்கு மட்டும் சிந்து நதி எவ்விதப் பிரச்சினையும் இன்றிப் பாய்கிறது? கர்நாடகம் சுயநலத்துடன் தமிழக மக்களை வஞ்சிக்கிறது என்று நீள்கிறது வைகோவின் கடிதம். ஐநாவில் எதிரொலிக்கும் இந்தப் புதிய முயற்சி வெல்லட்டும்.. விவசாயிகளுக்குப் புதிய விடியல் பிறக்கட்டும்!

கே.ராமநாதன், மதுரை.

பாராட்டுக்குரிய கணேசன்

சி

று வயது முதற்கொண்டே புத்தக வாசிப்பில் தனக்கு இருந்த ஆர்வத்தால், தொழில் செய்துவரும் இடத்திலேயே நூலகம் அமைத்து, வாடிக்கையாளருக் குக் கேசப் பராமரிப்புடன், வாசிப்புப் பழக்கத் தின் மேல் நேசம் கொள்ள வைக்க முயலும் முதுகலைப் பட்டதாரி பெ.கணேசன் பாராட்டுக்குரியவர். முடி வெட்டக் காத்திருக்கும் நேரத்தைக்கூட வீணாக்கவிடாமல், புத்தகங்கள் படிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் தம் பொதுஅறிவினை வளர்த்துக்கொள்ள உதவும் இம்முயற்சி போன்று ரயில் நிலையம், மருத்துவமனை, வங்கிகள் போன்ற பொதுஇடங்களிலும் மேற்கொள்ளலாமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x