Published : 27 Dec 2023 06:20 AM
Last Updated : 27 Dec 2023 06:20 AM
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பினை இந்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்துள்ளது. மல்யுத்தக் கூட்டமைப்பைச் சுற்றி கடந்த ஓராண்டாக நிகழ்ந்துவரும் சர்ச்சைகளின் பின்னணியில், இந்த இடைநீக்கம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த ஜனவரியில், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் அப்போதைய தலைவரும் பாஜக-வைச் சேர்ந்த நடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மற்றும் கூட்டமைப்பைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் சிலர் மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிரான போராட்டங்களில் முன்னின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT