பெரியார் அறிவுலகம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்

பெரியார் அறிவுலகம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்
Updated on: 
2 min read

இந்​தி​யாவிலேயே பொது நூல​கச் சட்​டத்தை முதன்​முதலில் இயற்​றிய பெருமை சென்னை மாகாணத்​தையே சாரும்.

நூலக இயக்​கத்​திலும் வாசிப்​புக் கலாச்​சா​ரத்தை வளர்ப்​ப​திலும் தமிழ்​நாடு நீண்ட பாரம்​பரியம் கொண்ட மாநிலமாகத் திகழ்​கிறது.

வாசகர்​களுக்கு மட்​டுமல்​லாது எழுத்​தாளர்​களுக்​கும் பதிப்​பாளர்​களுக்​கும் வாழ்​வாதா​ரம் உறுதிப்​படுத்​தப்​பட வேண்​டும் என்ற நோக்​கில்​தான் புத்​தகக் கொள்​முதல் நடைமுறை உரு​வாக்​கப்​பட்​டது.

பிரச்​சினை எங்கு தொடங்​கியது?

2009-லிருந்து தேர்ந்​தெடுக்​கப்​பட்ட தமிழ்ப் புத்​தகங்​கள் ஆயிரம் பிரதி​கள் வரை நூலகங்களுக்குக் கொள்​முதல் செய்​யப்​பட்​டன. இது தமிழ்ப் பதிப்​புத்​துறைக்கு மிகப்​பெரிய ஊக்​க​மாக இருந்​தது.

ஆனால், 2011க்​குப் பிறகான கால​கட்​டத்​தில் நூல் கொள்​முதல் தொடர்​பாகப் பல்​வேறு புகார்​கள் எழத் தொடங்கின.

சில பதிப்​பாளர்​கள் குழுக்களாகச் செயல்பட்டு அதி​காரி​களு​டன் நெருக்​கத்தை ஏற்​படுத்​திக்​கொண்டு கொள்​முதல் ஆணைகளைப் பெறு​வ​தாகவும், அதற்காக 30 சதவீதம் வரை லஞ்​சம் வழங்க வேண்​டி​யிருந்​த​தாகவும் புகார்​கள் எழுந்​தன.

2020 கால​கட்​டத்​தில், பல ஆண்​டுகளுக்கு முன்பு வெளியான சில நூல்​கள் புதிய பெயர்​களி​லும் புதிய வடிவங்​களி​லும் வெளி​யிடப்​பட்டு, நூல​கங்​களுக்​குக் கொள்​முதல் செய்​யப்​பட்​டன.

இது​குறித்து ஆதா​ரங்​களு​டன் சில பதிப்​பாளர்​கள் புகார்​கள் அளித்​தும் எந்த நட​வடிக்​கையும் எடுக்​கப்​பட​வில்லை. இந்​தக் குற்​றச்​சாட்​டுகள் அப்​போதே முறை​யாக விசா​ரிக்​கப்​பட்​டிருந்​தால், இன்​றைய பிரச்​சினைகளில் சில​வற்​றை​யாவது தவிர்த்​திருக்க முடியும்.

பிரச்​சினை​யின் புதிய வடிவம்

2022 - 24 கால​கட்​டத்​தில் புத்​தகங்​களே வாங்​கப்​பட​வில்லை. அதி​காரி​களைக் கேட்​டபோது, “2021இல் கிட்​டத்​தட்ட ரூ.180 கோடிக்​குப் புத்​தகங்​கள் வாங்​கப்​பட்​டன. ஆகவே நிலு​வை​களை முடித்​து​விட்​டுத்​தான் புதிதாக வாங்க வேண்​டும்” என்​றனர்.

இப்​படி ஒரே ஆண்​டில் மூன்​றாண்​டுகளுக்​குரிய புத்​தகங்​கள் வாங்க முற்​பட்​ட​தால்​தான் போலி நூல்​கள் நூல​கத்​துக்​குள் நுழைந்​தன. இந்​தப் பின்​னணி​யில்​தான் 2024இல் தமிழ்​நாடு அரசு வெளிப்​படைத்​தன்​மையான நூல் கொள்​முதல் கொள்​கையை அறி​முகப்​படுத்​தி​யது.

இதன் மூலம் அது​வரை அரசு நூல​கங்​களுக்​குப் புத்​தகங்​கள் வழங்க வாய்ப்​புப் பெறாத பதிப்​பாளர்​களும், தனிப்​பட்ட முறை​யில் நூல்​களை வெளி​யிடும் எழுத்​தாளர்​களும் தம் படைப்​பு​களை அரசின் கவனத்​துக்​குக் கொண்​டுசெல்ல முடிந்​தது.

இத்​திட்​டம் புத்​தகம் வாங்​கு​வதில் சரியான வழிமுறையை ஏற்​படுத்​தி​யதோடு, ஊழலை​யும் பெரு​மளவுக்​குக் குறைத்​து​விட்​டது எனலாம். இந்​நிலை​யில்​தான் கோவை பெரியார் அறி​வுல​கத்​துக்கு நூல்​கள் கொள்​முதல் செய்​ததில் நிகழ்ந்த முறைகேடுகளை எழுத்​தாளர் பெரு​மாள்​முருகன் அம்​பலப்​படுத்​தி​யிருக்​கிறார்.

அதை​யொட்டி எழுந்​துள்ள சர்ச்​சைகளை ஆராயும்​போது, புதிய சிறப்பு நூல​கங்​களுக்​கான புத்​தகக் கொள்​முதலுக்​குச் சரியான வழிகாட்​டல்​கள் இல்லை என்​பது புலப்​படு​கிறது.

பல கோடி ரூபாய் செல​வில் பிரம்​மாண்​ட​மான நூல​கங்​கள் கட்​டப்​பட்டு, அவை திறக்​கப்​படுவதற்​குச் சில மாதங்​களுக்கு முன்​புதான் நூல்​களை வாங்​கு​வதற்​கான நட​வடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​படு​கின்​றன. மிகக் குறுகிய கால அவகாசத்​தில் பதிப்​பாளர்​களிடம் புத்​தகங்​களைக் கேட்​டால், அவர்​கள் தங்​களிடம் கையிருப்​பில் உள்​ளதை வழங்​கக்​கூடிய சூழலே உரு​வாகும்.

மாற்று வழி என்ன?

ஒரு புதிய நூல​கத்​துக்​கான அடிக்​கல் நாட்​டப்​படும்​போதே அதற்​குத் தேவை​யான புத்​தகங்​களின் எண்​ணிக்​கையையும் வகைமை​களை​யும் திட்​ட​மிட்டு, அடுத்த ஓரிரு ஆண்​டுகளுக்​குள் நூல்​களை வழங்​குமாறு பொது​வெளி​யில் அறி​விப்பு வெளி​யிடலாம்.

இத​னால் பதிப்​பாளர்​களுக்​கும் போதிய அவகாசம் கிடைக்​கும்; நூல​கங்​களுக்​குத் தேவை​யான புத்​தகங்​களை​யும் முறை​யாகத் தேர்ந்​தெடுக்க முடியும்.

கோவை பெரியார் அறி​வுல​கத்​துக்​கான புத்​தகக் கொள்​முதலில் தேர்வு நடைமுறை, பரிந்​துரைக் குழுக்​களின் பங்​களிப்பு, இறுதி​யாக வாங்​கப்​பட்ட நூல்​களின் பட்​டியல் ஆகியவை குறித்த கேள்​வி​களுக்கு ஆவணங்​களின் அடிப்​படை​யில் தெளிவான பதில்​கள் அளிக்​கப்​பட வேண்​டும்.

இந்​தப் பிரச்​சினையை அரசி​யல் ரீதி​யாகக் குறுக்​கிப் பார்ப்​பது சரியான அணுகுமுறை அல்ல. 2024ஆம் ஆண்டு சென்னை உயர்​நீதி​மன்ற மதுரைக் கிளை வழங்​கிய தீர்ப்​பும் இந்​தத் தேவையை வலியுறுத்து​கிறது: “நூல் கொள்​முதல் தொடர்​பான அறி​விப்​பு​களை இணை​யதளத்​தில் வெளி​யிட வேண்​டும்; தேர்வு செய்​யப்​பட்ட நூல்​களின் விவரங்​களை​யும் அட்​டைப்​படங்​களை​யும் பொது​மக்​கள் பார்​வைக்கு வைக்க வேண்​டும்; மறுப்​பு​களை​யும் கருத்​துகளை​யும் பெற வேண்​டும்; முறைகேடு குறித்த புகார்​களை விசா​ரிக்க வேண்​டும்”.

அரசாங்​கம் உடனடி​யாகச் செய்ய வேண்​டியது

ஓய்வு​பெற்ற நீதி​யரசர் ஒரு​வர் தலை​மையில், ஓய்வு​பெற்ற உயர் காவல்​துறை அதி​காரி, கல்​வியாளர்​கள், நூல​கர்​கள், எழுத்​தாளர்​கள், பதிப்​பாளர்​கள், பத்​தி​ரி​கை​யாளர்​கள் மற்​றும் வாசகர்​கள் இடம்​பெறும் சுதந்​திர​மான விசா​ரணைக் குழுவை அமைக்க வேண்​டும்.

கடந்த பத்து ஆண்​டுகளில் கொள்​முதல் செய்​யப்​பட்ட நூல்​களின் தரம், ஒரே நூல் வெவ்​வேறு பெயர்​களில் அல்​லது பதிப்​பு​களில் தொடர்ந்து வாங்​கப்​பட்​டுள்​ளதா, கொள்​முதல் ஆணைகளில் பாரபட்​சம் இருந்​துள்​ளதா, முறைகேடுகள் நடை​பெற்​றுள்​ளனவா என்​பனவற்றை ஆய்வு செய்து, அறிக்​கையைப் பொது​வெளி​யில் வெளி​யிட வேண்​டும்.

அதேபோல், நூல​கங்​களில் சந்​தேகத்​துக்​குரிய நூல்​களைக் கண்​டறிந்​தால், வாசகர்​கள் அவற்​றின் விவரங்​கள் அனைத்​தையும் விசா​ரணைக் குழு​வுக்​குத் தெரி​விக்க ஏற்​பாடு செய்ய வேண்​டும். குற்​றம் செய்​தவர்​கள் யாராக இருந்​தா​லும் சட்​டத்​தின் முன் நிறுத்​தப்​பட வேண்​டும்.

ஊழலற்ற நேர்​மையான நிர்​வாகத்தை வழங்க விரும்​பும் எந்த அரசாங்​கமும், முந்​தைய அரசாங்​கத்​தைக் குறை கூறு​வதோடு தன்​னுடைய கடமையை முடித்​துக்​கொள்​ளக் கூடாது. நிர்வாக ரீதி​யாக உள்ள குறைபாடுகளைக் கண்​டறிந்து அவற்றை நிரந்​தர​மாகக் களைந்​தெறிய வேண்​டும்.

மற்ற துறைகளில் நடை​பெறும் ஊழல்​கள் அரசின் நிதி​யைச் சுரண்​டு​கின்​றன. ஆனால், நூல​கங்​களில் நிகழும் முறைகேடுகள் மக்​களின் அறி​வுச் சொத்​தையே சிதைக்​கின்​றன. இதன் பாதிப்பு நாளைய தலைமுறையையும் சென்றடையும்.

- olivannang@emeraldpublishers.com

பெரியார் அறிவுலகம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்
புக்கர் பரிசு நாளை அறிவிப்பு

X