ஏஐ மூலம் கிராமங்களின் முகத்தை மாற்ற முடியுமா?

மாறிவரும் கிராமப்புறப் பொருளாதாரத்தின் நுணுக்கமான மாற்றங்களைப் பதிவுசெய்வது அவசியம்
ஏஐ மூலம் கிராமங்களின் முகத்தை மாற்ற முடியுமா?
Updated on: 
3 min read

தமிழ்நாட்டின் கிராமங்களைப் பற்றிய நமது பார்வையில் பெரும்பாலும் பழைய கற்பனைகளே நிறைந்திருக்கின்றன. வயல்வெளி, கால்நடைகள், குளம், விவசாயம் போன்றவற்றை மையமாகக் கொண்ட கிராமச் சமூகம் இன்னும் இருக்கிறது.

ஆனால் அதுவே முழு உண்மை அல்ல; பல தொழில்கள், நகரத் தொடர்புகள், டிஜிட்டல் சேவைகள், இடம்பெயர்வு, காலநிலைச் சவால்கள் போன்றவற்றின் கலவையாகக் கிராமங்கள் மாறியுள்ளன.

இத்தகைய வேகமான மாற்றத்தை நாம் இன்னும் பழைய புள்ளிவிவரங்கள் மூலமாகவே புரிந்துகொள்ள முயல்கிறோம். இந்தச் சூழலில், செயற்கை நுண்ணறிவை (ஏஐ) வெறும் தொழில்நுட்பப் புரட்சியாக அல்லாமல், கிராமப்புற மாற்றத்தை அளவிடும் புதிய சமூக அறிவியல் கருவியாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மாறிவரும் தமிழகக் கிராமம்

தமிழ்நாடு இந்தியாவின் மிக அதிக நகரமயமான மாநிலங்களில் ஒன்றாகும். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மாநில மக்கள்தொகையில் 48.45% பேர் நகர்ப்புறங்களில் வாழ்ந்தனர். 2001-2011 காலக்கட்டத்தில் நகர்ப்புற மக்கள்தொகை 27% வளர்ந்தபோதும், கிராமப்புற மக்கள்தொகை வளர்ச்சி 6 சதவீதமாக மட்டுமே இருந்தது.

இது கிராமங்களும் நகரங்களும் தனித்தனி உலகங்களாக இல்லாமல், ஒன்றோடொன்று இணைந்த பொருளாதார அமைப்பாக மாறிவருவதைக் காட்டுகிறது. இன்று திருவாரூரில் வசிக்கும் ஒருவர் சென்னையில் உள்ள நிறுவனத்துக்காக இணையம் மூலம் பணியாற்றுகிறார்.

மதுரைக்கு அருகில் உள்ள ஒரு குடும்பத்தின் வருமானம் விவசாயம், கட்டுமானத் தொழில், அரசு உதவித்திட்டம், பெண்கள் சுயஉதவிக் குழு உற்பத்தி ஆகியவற்றின் கலவையாக இருக்கலாம். பல கிராம இளைஞர்கள் வாரத்தின் ஒரு பகுதியில் நகரங்களில் வேலை செய்து, மீதமுள்ள நாள்களில் கிராமங்களில் வாழ்கின்றனர்.

ஆனால், அரசின் பல புள்ளிவிவரத் தொகுப்புகள் இன்னும் குடும்பங்களை ‘விவசாயக் குடும்பம்’ அல்லது ‘தொழிலாளர் குடும்பம்’ என்கிற ஒற்றை அடையாளங்களுடன் மட்டுமே பார்க்கின்றன. இதன் விளைவாக, மாறிவரும் கிராமப்புறப் பொருளாதாரத்தின் நுணுக்கமான மாற்றங்கள் பதிவாகாமல் போகின்றன.

Loading content, please wait...

X