Published : 02 Dec 2015 10:39 AM
Last Updated : 02 Dec 2015 10:39 AM

களத்தில் தி இந்து: வைரமுத்துக்கு நன்றி

‘வைரமுத்துக்கு நன்றி!’

தமிழகம் முழுவதும் இருந்து ‘தி இந்து’ வாசகர்கள் அனுப்பிவரும் பாய், போர்வை, மண்ணெண்ணெய் ஸ்டவ், மளிகைப் பொருட்கள், ஆடைகள் உட்பட பல்வேறு நிவாரணப் பொருட்கள் கேபிஎன் டிராவல்ஸ் நிறுவ னத்தின் உதவியுடன் கடலூர் மாவட் டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களிடம் கடந்த 10 நாட்களாக வழங்கப்பட்டு வருகின்றன. இதில் வாசகர்களோடு பல்வேறு கல்வி மற்றும் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் கரங்களை இணைத்துக் கொண் டுள்ளன.

கடந்த 29-ம் தேதி சென்னையில் நடந்த ‘தி இந்து’ வாசகர் திருவிழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, சென்னை ஆயிரம் விளக்கு, சைதாப் பேட்டை பகுதிகளில் மழை, வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான பாய், போர் வைகளை நிவாரணப் பொருட்களாக வழங்குவதாக அறிவித்தார். அதில் முதல்கட்டமாக 650 பாய்கள், போர்வைகள் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை கொடுக்கப்பட்டன. நேற்று அடுத்த கட்டமாக 100 பாய்கள், போர்வைகள் வழங்கப்பட்டன. கொட்டும் மழையில் நனைந்தபடி வந்து ஏராளமானோர் பெற்றுக்கொண்டனர்.

ஆயிரம் விளக்கு திடீர் நகரில்..

திடீர் நகரில் பாய், போர்வையை பெற்றுக்கொண்ட முப்பத்தம்மாள் என்பவர் கூறும்போது, ‘‘கடந்த 18 நாளா வீட்டுக்கே போக முடியல. பள்ளிக்கூடத்துலதான் இருக்கோம். கொட்ற மழையில நின்னுக்கிட்டு இந்த நிவாரண பொருளுங்கள வாங்குறோம். இருந்தாலும் ராத்திரி படுக்க பாயும், போர்வையும் இருக்கேங்கிற சந் தோஷத்துல மனசு கொஞ்சம் நெற யுது. சினிமாக்காரங்க பல பேர் வீடு முன்னால போய் நின்னோம். மொத ஆளா வைரமுத்து அய்யா இந்த உதவியை செஞ்சிருக்காங்க. எல்லாருமா சேர்ந்து அவர நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு. இங்க உள்ள பசங்க எல்லாம் அவர் கொடுத்தனுப்பின பாய், போர்வையோட, அவர் போட்டோவையும் போட்டு ‘உதவிக்கு நன்றி!’னு வாட்ஸ்அப்-ல அனுப்பிக்கிட்டிருக்காங்க. அது மூலமாவும் எங்க நன்றி அவருக்கு நிச்சயம் போய் சேர்ந்துடும். இந்த நிவாரண பொருட்களை கொண்டு வந்து சேர்த்த ‘தி இந்து’ பத்திரிகைக்கும் நன்றி!’’ என்றார்.

மற்ற மாவட்டங்களில் இருந்தும் நிவாரண உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளது.

சேலம்

சேலம் மேச்சேரியை சேர்ந்த மீனாட்சி 18 ஸ்டவ், பெண்கள் - குழந்தை களுக்கான ஆடைகள், சேலம் குகை பாலசுப்ரமணியம், பெரியபுதூர் மணி, பத்மா ஆகியோர் ஸ்டவ்கள், குகை ராஜாமணி, சாந்தி ஆகியோர் போர் வைகளை வழங்கினர்.

வேலூர்

ராணிப்பேட்டை ராணி பெல் நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ரத்தினம் 10 பாய், 10 போர்வை, 5 ஸ்டவ்கள், சத்துவாச்சாரி ஜி.சிவக்குமார் 10 போர்வை, தீப்சிங் 2 போர்வை வழங்கினர்.

தருமபுரி

தருமபுரி காந்திநகர் பகுதி தீபக்குமார், ரித்திஷா, வனிதாமணி, குமுதா அடங்கிய நண்பர்கள் குழுவினர் 26 போர்வை, ஒரு அட்டைப் பெட்டி நிறைய மளிகை பொருட்கள், துண்டுகள் அடங்கிய பார்சல்களை வழங்கினர்.

கிருஷ்ணகிரி

ஓசூர் பசுமை தாயகம் அமைப்பின் நிர்வாகி முனிசேகர் 10 ஸ்டவ், கிருஷ்ணகிரி மணி 8 போர்வைகள், ஒரு பாய் வழங்கினார். சந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 25 மாணவிகள் சேர்ந்து 12 போர்வை, 5 சால்வைகள் வழங்கினர்.

ஈரோடு

ஈரோடு இளங்கோ 20 ஸ்டவ், தங்கவேலு, பாலசுப்பிரமணியன் 10 போர்வைகள், ஆடைகளை வழங்கி னர். ஈரோடு டிஎஸ்பி பி.சம்பத் மற்றும் வாட்டர்போர்டு காலனி நல சங்கத் தினர் சார்பில் 30 போர்வைகளை அனுப்பினர்.

திருப்பூர்

தாராபுரம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் 200 பாய்கள், 200 போர்வைகள், 25 தலையணை, 35 மண்ணெண்ணெய் அடுப்புகள், 375 கிலோ அரிசி, 175 சில்வர் தட்டுகள், 75 டம்ளர், 77 உடை கள் என மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 600 மதிப்பிலான பொருட் களை அனுப்பினர்.

பி.ராஜ்மோகன், கே.சுப்புரத்தினம், பி.சிவக்குமார், கே.முத்துக்குமார் ஆகிய நண்பர்களின் உதவியால் இது சாத்தியமானது. தாராபுரம் பகுதியில் பலரும் உதவ முன்வந்தனர். அதை ஒருங்கிணைத்து இந்த உதவிகளை வழங்கியுள்ளோம் என்று விழுதுகள் நிறுவனத் தலைவர் வீரமணி ஆறுமுகம் கூறினார். திருப்பூர் நெப்டியூன் நிட்டிங் ஒர்க்ஸ் 100 பெட்ஷீட், குழந்தைகள் அணியும் பனியன், பேன்ட் என மொத்தம் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை அனுப்பினர். உறவினர் களான வி.எஸ்.ரத்தினசாமி, கே.ஏ.ஜெக தீசன் இணைந்து 6 ஸ்டவ் அனுப் பினர்.

பின்னலாடைகள்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தினர் (TEA), சங்க உறுப்பினர்களிடம் பின்னலாடைகளை சேகரித்து வந்தனர். ரூ.3 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் பின்னலாடைகளை அனுப்பினர்.

குடிநீர் குடம் வேண்டும்!

ஆயிரம் விளக்கு பகுதியில் நிவாரண உதவியை பெற்றுக்கொண்ட வளர்மதி என்பவர் கூறும்போது, ‘‘ரெண்டு வாரமா பெஞ்ச மழையில வீட்ல இருந்த பொருளுங்க எல்லாம் வீணா போச்சு. மழை வுட்டு வேலைக்கு போய்தான் ஒவ்வொண்ணா வாங்கி சேக்கணும். பாய், போர்வை எல்லாம் கொடுத்திருக்கீங்க. குடிக்க தண்ணி பிடிக்க ஒரு குடம் கொடுத்தா புண்ணியமா போகும்’’ என்றார் கண்ணீர் பொங்க!

வாசகர்கள் தந்த உந்துதல்

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அரிசி, பருப்பு போன்ற மளிகைப் பொருட்கள், பிஸ்கெட், ரொட்டி போன்ற உணவுப் பொருட்கள், சலவை, குளியல் சோப், பேஸ்ட், பிரஷ், ஆடைகள் போன்றவற்றை சேகரித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.போஜன், தேசிய மாணவர் படை பொறுப்பாசியர் ஆர்.ராஜசேகரன், சாரணர் படை பொறுப்பாசிரியர் கே. வடிவேல் ஆகியோரது உதவியுடன் அனுப்பினர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறியபோது, ‘‘கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘தி இந்து’ வாசகர்கள் செய்துவரும் உதவியைப் பார்த்தோம். அதனால் ஏற்பட்ட உந்துதலுடன் இப்பணியை தொடங்கினோம். பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து சேகரித்த பொருட்களை அனுப்பிவைத்தோம்’’ என்றனர்.

உதவிகள் தொடரட்டும். இணைந்த கைகள் ஆறுதல் தரட்டும்!.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x