Published : 29 Jul 2015 01:16 PM
Last Updated : 29 Jul 2015 01:16 PM

காற்றில் கலந்தாயோ கனவே...

கற்றல் பயன்தரும்போது

கற்பனைவளம் மலர்கிறது.

கற்பனைவளம் மலர்கிறபோது

சிந்தனை மேம்படுகிறது.

சிந்தனை மேம்படும்போது

அறிவு ஒளி வீசுகிறது.

அறிவு ஒளி வீசும்போது

பொருளாதாரம் வளம் பெறுகிறது!

- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

ஷில்லாங்கில் இருந்து கலாமின் உடலை சுமந்துவரும் விமானப் படை ஹெலிகாப்டர், அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நேற்று காலை தரையிறங்குகிறது. அதற்கு மரியாதை செலுத்தும் விமானப் படையினர். படம்: பிடிஐ

விமான நிலையத்தில் இருந்து ராஜாஜி சாலையில் உள்ள இல்லத்துக்கு ஆயுத வாகனத்தில் உடல் கொண்டுசெல்லப்படுகிறது. படம்: ஏ.எப்.பி

விமானப் படையின் சிறப்பு விமானத்தில் கலாம் உடல் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. டெல்லி வந்தடைந்த விமானத்தில் இருந்து மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டிருக்கும் கலாம் உடலை சுமந்துவரும் முப்படையினர். படம்: ஏ.எப்.பி

விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி மார்ஷல் அர்ஜன் சிங். பீல்டு மார்ஷல் பதவிக்கு நிகராக 5 ஸ்டார்கள் அந்தஸ்துடன் பதவி உயர்வு பெற்ற ஒரே அதிகாரி. 96 வயதாகும் இவர் சக்கர நாற்காலியை விட்டு பெரும்பாலும் எழுந்திருப்பதே இல்லை. நேற்று, டெல்லி விமான நிலையத்துக்கு சக்கர நாற்காலியில் விமானப் படை சீருடையில் இவரும் வந்திருந்தார். விமானப்படை வீரரின் உதவியுடன் சக்கர நாற்காலியில் இருந்து எழுந்த இவர், ஊன்றுகோல் உதவியுடன் மெதுவாக நடந்துவந்தார். வீரர் அவரைத் தாங்கிப் பிடித்திருக்க, கலாமின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் மார்ஷல் அர்ஜன் சிங். கைகள் நடுங்கியபோதும் நெஞ்சை நிமிர்த்தி சல்யூட் செய்தார். படம்: ஆர்.வி.மூர்த்தி

இந்தியத் திருநாட்டின் முதல் குடிமகனாக அப்துல் கலாம் ஐந்தாண்டு காலம் வளையவந்த குடியரசுத் தலைவர் மாளிகையில் அரைக் கம்பத்தில் பறக்கிறது தேசியக் கொடி. படம்: ராய்ட்டர்ஸ்

டெல்லி இல்லத்தில் கலாமுக்கு அஞ்சலி செலுத்த வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள். படம்: ஏ.எப்.பி

கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கர்நாடக மாநிலம் மங்களூரில் நேற்று அமைதி ஊர்வலம் சென்ற பள்ளி, கல்லூரி மாணவிகள். படம்: எச்.எஸ்.மஞ்சுநாத்

அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கமான எம்ஐடி-யில் ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் பயின்றவர் கலாம். முன்னாள் மாணவரான அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள். படம்: ம.பிரபு

அஞ்சலி செலுத்தும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால். படம்: ஆர்.வி.மூர்த்தி

டெல்லி ராஜாஜி சாலையில் வைக்கப்பட்டுள்ள கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். (அடுத்த படம்) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. படங்கள்: ஏ.எப்.பி

கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் டெல்லியில் நேற்று நடந்த பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி.

டெல்லியில் உள்ள கலாம் இல்லத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. படம்: பிடிஐ

மேகாலயாவில் இருந்து மாநில ஆளுநர் வி.சண்முகநாதனும் கலாம் உடலுடன் டெல்லி வந்தார். அவருடன் பேசும் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர். படம்: ஆர்.வி.மூர்த்தி

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் பள்ளி மாணவிகள் படம்: ஏ.எம்.ஃபரூக்கி

பிறந்தது தென்கோடி என்றாலும், தன் கள்ளமில்லாச் சிரிப்பாலும், உற்சாகம் தரும் பேச்சாலும் நாடு முழுவதும் கோடானுகோடி இளைஞர்கள், மாணவர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் கலாம். அவரது மறைவு இந்த தேசத்தையே கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது. சண்டிகரில் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்கள். படங்கள்: அகிலேஷ்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x