Published : 01 May 2019 09:34 AM
Last Updated : 01 May 2019 09:34 AM

காந்தி பேசுகிறார்: முதலாளி ஏன் தர்மகர்த்தா?

நாம் எல்லோரும் சமமாகவே பிறந்திருக்கிறோம். எனவே, சமமான சந்தர்ப்பத்துக்கு நமக்கு உரிமையிருக்கிறது என்றாகிறது. ஆனால், ஆற்றல் எல்லோருக்கும் ஒரே மாதிரியானதாக இல்லை. சமூகத்தைப் பற்றிய என் கருத்து இதுதான். இயற்கை இருக்கும் வகையில் ஒரே மாதிரியான ஆற்றல் எல்லோருக்கும் இருப்பதற்கில்லை. உதாரணமாக, எல்லோருக்கும் ஒரே மாதிரியான உயரம், நிறம், அறிவுத்திறன் இருப்பதற்கில்லை. ஆகையால், இருக்கும் இயல்பின்படி, சம்பாதிப்பதற்கு வேண்டிய ஆற்றல் சிலருக்கு அதிகமிருக்கும், மற்றவர்களுக்குக் குறைவாக இருக்கும். திறமையுள்ளவர்களிடம் அதிகம் இருக்கும்; இக்காரியத்துக்காகத் தங்கள் திறமையை அவர்கள் உபயோகிப்பார்கள். அத்திறமையை அன்போடு அவர்கள் உபயோகிப்பார்களானால் ஒரு ராஜ்யத்தின் வேலையை அவர்கள் செய்துவருபவர்களாவர். வேறு எந்த முறையிலும் இல்லாமல் அத்தகையவர்கள் தர்மகர்த்தாக்களாக இருந்துவருவார்கள். அறிவுள்ள ஒருவர் அதிகமாகச் சம்பாதிக்க நான் அனுமதிப்பேன்; அவருடைய ஆற்றலை நசுக்கிவிட மாட்டேன். ஆனால், ஒரு தந்தையின் சம்பாதிக்கும் திறமையுள்ள பிள்ளைகளின் வருவாயெல்லாம் பொதுவான குடும்ப நிதிக்குப் போவதைப் போன்று ஒரு அறிவாளியின் வருமானத்தில் அதிகமாயிருப்பதெல்லாம் ராஜ்யத்தின் நன்மைக்கு உபயோகிக்கப்பட வேண்டும். தர்மகர்த்தாக்கள் என்ற வகையில்தான் அவர்கள் சம்பாதிக்க வேண்டும். இதில் நான் பரிதாபகரமான வகையில் தோல்வியடைந்துவிடக்கூடும். என்றாலும், இதை அடைவதற்காகவே நான் முயன்றுவருகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x