Published : 22 Jun 2018 07:53 AM
Last Updated : 22 Jun 2018 07:53 AM

நம்பிக்கைக் கால்கள்!

தகர கேன்களால் செய்யப்பட்ட செயற்கைக் கால்களைக் கொண்டு நடந்துவரும் இந்த எட்டு வயதுச் சிறுமியின் பெயர், மாயா முகமது அலி மெர்ஹி. சிரியாவின் வடக்கு மாகாணமான இத்லிபில் உள்ள அகதிகள் குடியிருப்பில் வசிக்கும் மாயா, பிறவியிலிருந்தே கால்கள் இல்லாதவர். அடிப்படைத் தேவைகளுக்கே பொருளாதார வசதியில்லாத நிலையில், தனது மகளை எப்படியாவது நடக்கவைக்க வேண்டும் என்று விரும்பிய மாயாவின் தந்தை, தகர டின்னில் பஞ்சு, துணித் துண்டுகளை வைத்து இந்தச் செயற்கைக் கால்களை உருவாக்கித்தந்திருக்கிறார். வேதனையான விஷயம், அவருக்கும் பிறவியிலிருந்தே கால்கள் இல்லை. போரால் அதிர்ந்துகொண்டிருக்கும் அலெப்போ மாகாணத்திலிருந்து தப்பிவந்தது இவரது குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x