Published : 13 May 2018 09:44 AM
Last Updated : 13 May 2018 09:44 AM

காஷ்மீரிகளின் வலியை உணருங்கள்..!: முகமது யூசுப் தாரிகாமி பேட்டி

ப்போதும் பதற்றம் நிலவும் ஜம்மு-காஷ்மீரில் இப்போது பொதுமக்கள் கொல்லப்படுவது இன்னும் அதிகமாகிவிட்டது. ‘காஷ்மீர் ஏன் இன்னும் பற்றியெரிகிறது’ என்கிற தலைப்பில் பேச, சென்னைக்கு வந்திருந்தார் காஷ்மீரின் குல்காம் தொகுதி எம்எல்ஏவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமி.

காஷ்மீர் பிரச்சினை தீவிரமடைந்துகொண்டே இருக்கிறதே, எப்படித்தான் தீர்த்துவைப்பது?

காஷ்மீர், ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் துயரம் சூழ்ந்திருக்கிறது. ஆனால், காஷ்மீர் எப்போதும் இப்படி இருக்கவில்லை. 1947-ல் காஷ்மீரிகள் இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பினார்கள். இந்தியாவுடன் சேரும்போது தன்னாட்சி உரிமைகளைக் கோரியது. அவை ஏற்கப்பட்டன. அப்போதைய அரசை ஆண்டவர்கள் கொடுத்த வாக்குறுதிகள், அரசியல் சாசனத்திலும் சேர்க்கப்பட்டன. அவைதான் அந்த தனித்துவமான உறவுக்கு அடித்தளம் அமைத்தன. அப்போது அவர்களுக்கு இந்தியா மீது மிகுந்த நம்பிகை இருந்தது. இப்போது அந்த நம்பிக்கை அவநம்பிக்கையாக மாறிவிட்டது.

தீவிரவாதக் குழுக்களில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறதா?

பிரச்சினையின் வேர்கள் ஆழமானவை. ‘அந்நியமாக்கப்படுகிறோம்’ என்கிற உணர்வு மக்களிடம் ஆழமாகப் பதிந்துவிட்டது. காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையே பெரும் இடைவெளி விழுந்துவிட்டது. இதுவே எதிரிகள் ஊடுருவுவதற்கான வாய்ப்பும்கூட. இந்திய அரசு எதிரிகளுடன் சண்டையிடுவதற்குப் பதிலாக மக்களுடன் சண்டையிடுகிறது. நாட்டின் ஒற்றுமைக்கும் காஷ்மீர் மக்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கும் போர் இது. இதை நிறுத்தியாக வேண்டும்.

காஷ்மீரிகள் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

‘கதுவா’ சிறுமிக்கு நீதி கிடைக்க நீங்கள் எழுப்பிய குரலுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். இதுபோன்ற அணுகுமுறை இரு மாநில மக்கள் உறவை வலுப்படுத்தும். நான் ஒட்டுமொத்த இந்தியர்களிடம் கேட்டுக்கொள்வது இதுதான்... காஷ்மீரிகளின் வலியை உணருங்கள். அவர்களது துன்பத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் கைகோத்து நில்லுங்கள். நான் இந்த அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன், மக்களாகிய உங்களை மட்டுமே நம்புகிறேன்!

(இன்னும் ஏராளமான கேள்விகள்...

முழு பேட்டியும் படிக்க... ‘காமதேனு’!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x