Published : 05 Jan 2018 05:44 PM
Last Updated : 05 Jan 2018 05:44 PM

2017: மறக்க முடியுமா? - விளையாட்டு

ஜனவரி

ஜன. 4: ஒரு நாள் டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து எம்.எஸ்.தோனி விலகினார்.

பிப்ரவரி

பிப். 20: ஐ.பி.எல். ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸை ரூ.14 கோடிக்கு புனே அணி ஒப்பந்தம்செய்தது.

ஏப்ரல்

ஏப். 30: சென்னையில் நடந்த ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் தீபிகா பல்லிக்கல் சாம்பியன் பட்டம் வென்றார்.

05CHDKNASIANATHLETICSCHAMPIONSHIP

மே

மே. 21: ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை அணி புனே அனியை ஒரு ரன்னில் வீழ்த்தி 3-வது முறையாகக் கோப்பையை வென்றது.

ஜூன்

ஜூன். 18: ஐ.சி.சி. சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாகக் கோப்பையை வென்றது பாகிஸ்தான்.

ஜூன் 20: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அனில் கும்ப்ளே அறிவித்தார்.

ஜூலை

ஜூலை 12: இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் மித்தாலி ராஜ், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.

ஜூலை 23: லண்டனில் நடந்த மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 9 ரன்னில் வீழ்த்தி கோப்பையை வென்றது.

செப்டம்பர்

செப். 7: ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் சீனியர் பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதிஷ்குமார் தங்கப் பதக்கம் வென்றார்.

செப். 21: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தினார்.

அக்டோபர்

அக். 6-18: இந்தியாவில் முதன்முறையாக நடந்த ஜூனியர் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி கோப்பையை இங்கிலாந்து வென்றது.

அக். 22: வங்க தேசத்தில் நடந்த ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

kidambi srikanth

நவம்பர்

நவ. 1: வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

நவ. 8: வியட்நாமில் நடந்த ஆசிய குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் 5-வது முறையாகத் தங்கப் பதக்கம் வென்றார்.

நவ. 12: தோஹாவில் நடந்த உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி பட்டம் வென்றார்.

நவ. 29: அமெரிக்காவில் நடந்த உலகப் பளு தூக்கும் போட்டியில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்று சாதித்தார்.

டிசம்பர்

டிச. 7: உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப் பந்தை போர்ச்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5-வது முறையாக வென்றார்.

டிச. 10: புவனேஸ்வரில் நடந்த உலக ஹாக்கி லீக் தொடரில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

டிச. 13: மொகாலியில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் ரோஹித் சர்மா இரட்டைச் சதம் விளாசினார். இது இவரது மூன்றாவது இரட்டைச் சதம்.

 

rojer federer and rafel nadal100rightடென்னிஸ் ராஜாக்கள்

டென்னிஸில் 30 வயதைக் கடந்தால் ஒதுங்கும் வீரர்களுக்கு மத்தியில், இரண்டு வீரர்கள் விஸ்வரூபம் காட்டினார்கள். அவர்கள், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் (36 வயது), ஸ்பெயினின் ரபேல் நடால் (31 வயது). முக்கிய கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை இவர்கள் இருவருமே பங்கிட்டுக்கொண்டார்கள். ரோஜர் ஃபெடரர் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் ஓபனை வசமாக்கினார். ரபேல் நடால் பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் பட்டங்களைத் தனதாக்கினார்.

 

ஓய்ந்த கால்கள்

உலகின் புகழ்பெற்ற தடகள வீரர் உசைன் போல்ட் லண்டனில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியோடு ஓய்வுபெற்றார். யாரும் வெற்றிகொள்ள முடியாத மின்னல்வேக ஓட்ட மனிதர் என்ற அறியப்பட்ட உசைன் போல், கடைசியாகப் பங்கேற்ற 100 மீட்டர், 4*400 மீட்டர் பந்தயங்களில் தோற்றது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. ஆனால், தடகளத்தில் 19 சர்வதேச, ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றவர் என்ற பெருமையுடன் ஓய்வுபெற்றார்.

 

ashwinகிரிக்கெட்டின் இருவர்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சுழல் மன்னரான அஸ்வின், குறைந்த (54 போட்டிகள்) டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளைக் கடந்தவர் என்ற சாதனையைச் சொந்தமாக்கினார். நவ.27ல் இலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடந்த டெஸ்டில் இந்தச் சாதனையைப் படைத்தார். 56 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி செய்திருந்த இந்தச் சாதனையைத் தரைமட்டமாக்கினார் அஸ்வின்.

கேப்டனாக ஆறு இரட்டைச் சதங்கள் அடித்தவர், இந்த ஆண்டு 11 சதங்களைக் கடந்தவர், தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வென்றுகாட்டியவர் என இந்த ஆண்டு விராட் கோலி காட்டில் வெற்றி மழைதான். ரன் மெஷினாக மாறி இந்த ஆண்டில் மட்டும் அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் 2,818 ரன் விளாசியிருக்கிறார். சர்வதேசப் போட்டிகளில் 50 சர்வதேச சதங்களையும் இந்த ஆண்டு கடந்தார் கோலி.

 

pv sindhu100rightபாட்மிண்டன் சூறாவளிகள்

இந்திய பாட்மிண்டனின் வெற்றிப் பயணம் இந்த ஆண்டும் தொடர்ந்தது. பிவி. சிந்து, உலக சாம்பியன்ஷிப் (ஆக. 7) தொடரில் வெள்ளிப்பதக்கம், இந்திய ஓபன், கொரியன் ஓபனில் தங்கம் என தொடர்ந்து சர்வதேச பாட்மிண்டன் தொடர்களில் வெற்றிக்கொடி நாட்டினார். உலக பாட்மிண்டன் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறினார் பி.வி. சிந்து.

இதேபோல ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் இந்தோனேஷிய ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், டென்மார்க் ஓபன், பிரெஞ்சு ஓபன் என சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்று உலகின் தரமான பாட்மிண்டன் வீரர்களில் ஒருவராக மாறினார் ஸ்ரீகாந்த். மற்றொரு வீரரான பிரனாய் குமார் இந்தோனேஷிய ஓபன், வியட்நாம் ஓபன் தொடர்களில் பட்டம் வென்று அசத்தினார்

 

புது அவதாரம்

இந்த ஆண்டு தமிழக விளையாட்டு வீரர் ஒருவரின் தனிப்பட்ட சாதனையாகப் புதுக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமணனின் வெற்றியை ஆராதிக்கலாம். புவனேஸ்வரில் ஜூலை 6-ல் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டி 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் லட்சுமணன் தங்கம் வென்றார்.

மிகவும் பின்தங்கிய, ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், இளம் வயதிலிருந்தே வெறுங்காலில் புதுக்கோட்டை சாலைகளில் ஓடி பயிற்சி பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x