Published : 31 Aug 2015 12:27 PM
Last Updated : 31 Aug 2015 12:27 PM

நன்மை தரும் செயல் அல்ல

குஜராத் போராளி ஹர்திக் படேலின் சீற்றம் சில உண்மைகளையும், சில சங்கடங்களையும் முன்னிறுத்துகிறது. 80%, 90% மதிப்பெண் பெற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டு 45%, 50% மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வுபெறுவதாக ஆவேசப்படுகிறார். இது யோசிக்கப்பட வேண்டும்.

ஆனால், அதற்குத் தீர்வு இடஒதுக்கீட்டை ரத்துசெய்வதல்ல. மாறாக, விகிதாச்சார அடிப்படையில் எல்லா சமூகத்துக்குமான 100% இடஒதுக்கீடு மட்டுமே தீர்வாக அமையும். அதை விடுத்து இப்படியான போராட்டம் தேசத்துக்கு நன்மை தரும் செயல் அல்ல.

- முஹம்மது அன்சாரி மன்பயீ,லால்பேட்டை.

***

இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒரு செய்தியைத் திரும்பவும் கவனப்படுத்தியிருக்கின்றன இந்தக் கலவரங்கள். மக்களிடையே பிளவும் பிரிவினைவாதமும் இனவுணர்வும் அரசியலாதிக்கம் செலுத்துமிடங்களில் சிறுபான்மைச் சமூகங்கள் மட்டும் அல்ல;

பெரும்பான்மைச் சமூகமும் நிம்மதியாக வாழ முடியாது என்பதுதான் குஜராத், இந்தியாவுக்கு நினைவூட்டும் மிக முக்கியமான அந்தச் செய்தி. பிரிவினை அரசியலின் தொடக்கக் குறி சிறுபான்மையினரில் தொடங்கலாம்; அதன் முழு வீச்சு எல்லோரையும் சுற்றிவளைத்து, அதன் இறுதி இலக்கு கடைசி மனிதனின் உயிரையும் விலை கேட்பதாகவே அமையும்.

- சுஜித் குமார் வாசுதேவன்,மின்னஞ்சல் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x