Published : 20 Sep 2018 09:41 AM
Last Updated : 20 Sep 2018 09:41 AM

‘தி இந்து’வுக்கு 140 வயது!

தேசப்பற்று மிக்க ஆறு திருவல்லிக்கேணி இளைஞர்களால் 20.09.1878-ல் வாரப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது ‘தி இந்து’. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் என்ற பள்ளிக்கூட ஆசிரியர் அதன் ஆசிரியர். பச்சையப்பன் கல்லூரி ஆசிரியர் எம்.வீரராகவாசாரியார், சட்டக் கல்லூரி மாணவர்கள் டி.டி. ரங்காசாரி, பி.வி.ரங்காசாரி, டி.கேசவ ராவ் பந்துலு, என்.சுப்பா ராவ் பந்துலு ஆகியோர் ஆசிரியர் குழுவினர். ஒரு ரூபாய் 12 அணா கடன் வாங்கி, ஸ்ரீநிதி அச்சகத்தில் 80 பிரதிகள் அச்சிட்டு, வாராந்தரியாகத் தொடங்கியது முதல் விற்பனை. ஒரு பிரதியின் விலை 4 அணா. 1883-ல் அது வாரத்தில் மூன்று முறை வெளியாகும் பத்திரிகையானது. 1889-ல் மாலைப் பத்திரிகையானது. பத்திரிகையின் சட்ட ஆலோசகராகவும் அதன் கட்டுரையாளர்களில் ஒருவராகவும், பத்திரிகையை ஆதரித்துவந்தவர்களில் ஒருவராகவும் இருந்த கஸ்தூரி ரங்கன் 1905-ல் ‘தி இந்து’வின் உரிமையாளர், ஆசிரியரானார். 1940-ல் அது காலை தினசரியானது. 1978-ல் நூற்றாண்டு கண்டது. 140 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 141-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது ‘தி இந்து’. தரமான இதழியலுக்கான இந்திய முன்னுதாரணம் வாசகர்களின் மகத்தான ஆதரவுடன் தலைமுறைகளைக் கடந்து முன்னோக்கிச் செல்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x