Last Updated : 09 Sep, 2017 09:13 AM

 

Published : 09 Sep 2017 09:13 AM
Last Updated : 09 Sep 2017 09:13 AM

பிறமொழி நூலறிமுகம்: எம்மானை வீழ்த்திய மாயமான்!

ந்திய நாட்டின் விடுதலைக்கு முன்பாக வேற்றுமைகளைக் கடந்து கோடானு கோடி மக்களை அணி திரட்டிய அண்ணல் காந்திக்கு எதிராக உருவான விஷமிக்க கசப்புணர்வு, அவர் காலம் எல்லாம் உறுதிபட முன்வைத்த கருத்து கள் அனைத்தையும் மறுதலித்தது ஆகிய அனைத்தையும் நினைவுபடுத்திக் கொள்வதன் மூலமே அண்ணலின் படுகொலையின் பின்னேயுள்ள அரசியல் தன்மையை நம்மால் உணர முடியும்.

கொலையுண்டவரின் மீது பழி சுமத்தி, கொலையாளிகளைப் புனிதர்களாக மாற்ற முயல்வோர் வலுப்பெற்றுள்ள பின்னணியில், அண்ணல் காந்தியின் படுகொலை தொடர்பான ஆவணங்களைக் காற்றில் கரைக்க நடந்துவரும் முயற்சிகளின் பின்னணியில், அவரது படுகொலை தொடர்பான எழுத்துகளைப் பல்வேறு திசைகளிலிருந்து திரட்டிய வகையில் வெளிவந்துள்ளது இந்நூல். குஜராத் படுகொலைகளுக்கு எதிராகக் களம்புகுந்த டீஸ்டா செடல்வாட் தொகுத்து, அறிமுகம் செய்துள்ள இந்நூல் இந்த அரசியல் படுகொலைக்குக் காரணமாக இருந்த தத்துவத்தை மீளாய்வு செய்யும் எழுத்துகளை மராத்தி, குஜராத்தி, இந்தி மொழிகளிலிருந்து ஒன்றுதிரட்டி, அவற்றை அரசின் விசாரணை தொடர்பான கோப்புகளோடு ஒப்புநோக்குகிறது.

பெயாண்ட் டவுட் – எ டோஸியர் ஆன் காந்தி’ஸ் அசாசினேஷன் – தொகுப்பு , அறிமுகவுரை – டீஸ்டா செடல்வாட் – துளிகா புக்ஸ், புதுதில்லி – 110 0049. விலை. ரூ. 550/-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x