Published : 18 Jun 2022 07:27 AM
Last Updated : 18 Jun 2022 07:27 AM

வெய்யில் படைப்புலகம்

கவிஞர் வெய்யிலின் படைப்புலகம் குறித்த ஒரு நாள் நிகழ்வை ஆகுதி பதிப்பகம் ஏற்பாடு செய்திருக்கிறது.
எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, க.பஞ்சாங்கம், அரங்கமல்லிகா, அ.வெண்ணிலா, ம.கண்ணம்மாள், முத்துராசா குமார், ஜா.ராஜகோபாலன், ந.பெரியசாமி, ராஜேஷ், த.ஜீவலட்சுமி, காளி பிரசாத், பா.ரவிக்குமார், வசுமித்ர, மனோமோகன், செந்தில் கரிகாலன், வேல்கண்ணன் என்று தமிழின் மூத்த படைப்பாளிகள், இளம் படைப்பாளிகள், விமர்சகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வெய்யிலின் கவிதைகள் குறித்துப் பேசவிருக்கிறார்கள்.

பொதுவாக 60, 70 வயதைக் கடந்தால்தான் எழுத்தாளர்களைச் சிறப்பிக்க விழா எடுக்கப்படும். இப்படிப்பட்ட சூழலில் இளந்தலைமுறைக் கவிஞர் ஒருவரின் படைப்புலகம் குறித்து, இவ்வளவு விரிவான நிகழ்வு நடக்கவிருப்பது ஆரோக்கியமான மாற்றம். இது மற்றவர்களுக்கும் தொடர வேண்டும். இடம்: நிவேதனம் அரங்கம், மயிலாப்பூர். நாள்: 19-06-22. நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x