Published : 29 Jan 2022 12:11 PM
Last Updated : 29 Jan 2022 12:11 PM

நல்வரவு: அமெரிக்கப் பெண்

அமெரிக்கப் பெண் கவிஞர் எமிலி டிக்கின்சன், இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான டி.எச்.லாரன்ஸ் ஆகியோரின் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கூடவே, அவர்கள் இருவரின் வாழ்க்கைக் குறிப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

எமிலி டிக்கின்சன், டி.எச்.லாரன்ஸ்

தமிழில்: ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்

ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க், ஸ்ரீவில்லிபுத்தூர்- 626 125

விலை: ரூ.120 தொடர்புக்கு: 90805 51905

**

சந்திரகுப்த மெளரியர், அசோகர், சாணக்கியர், சாரநாத் சிம்மத் தூண், சாஞ்சி ஸ்தூபி என இந்திய வரலாற்றின் மிக முக்கியமான ஆளுமைகளையும் சின்னங்களையும் அளித்த மெளரியப் பேரரசின் ஆட்சியையும் அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையையும் அறிமுகப்படுத்தும் நூல்.

மலைக்க வைக்கும் மெளரியப் பேரரசு, குன்றில்குமார்

அழகு பதிப்பகம், வில்லிவாக்கம், சென்னை - 600 049 விலை: ரூ.160 தொடர்புக்கு: 94441 91256

**

‘இலக்கியவீதி’ அமைப்பை நடத்தியவர் இனியவன். அகிலன், லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணன், ஜெயகாந்தன். நா.பா, தி.க.சி., அழ.வள்ளியப்பா உள்ளிட்ட 20 எழுத்தாளுமைகளுடனான தனது அனுபவங்களை ‘அமுதசுரபி’ இதழில் கட்டுரைகளாக எழுதியதன் தொகுப்பு.

காலம் கொடுத்த கொடை, இலக்கியவீதி இனியவன்

வானதி பதிப்பகம், தியாகராய நகர்,

சென்னை - 600 017 விலை: ரூ.175

தொடர்புக்கு - 2434 2810

**

சென்னை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் ஜெ.கமலநாதன் எழுதியிருக்கும் இந்நூல், வாழ்வை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்வதற்கும், சராசரி மனிதர்கள் உயர்வான வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கும் வழிகாட்டும் 13 கட்டுரைகளை உள்ளடக்கியது.

வாழ்வே வசந்தம் ஆகட்டும், ஜெ.கமலநாதன்

சுவாமிமலை பதிப்பகம், தி.நகர்

சென்னை - 600 017 விலை: ரூ.90

தொடர்புக்கு - 2434 3742/2431 2559

**

பாவேந்தர் பாரதிதாசனின் புகழ்பெற்ற படைப்புகளில் ‘குடும்ப விளக்கு’ 1944 தொடங்கி 1950 வரை ஐந்து பகுதிகளாக வெளிவந்தது. ஐந்து பகுதிகளுக்கும் உரையுடன் சேர்த்து இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. கூடவே ‘அழகின் சிரிப்பு’ம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பாவேந்தர் பாரதிதாசனின் குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு - மூலமும் உரையும்

உரையாசிரியர் - தமிழ்ப்பிரியன்

அருணா பப்ளிகேஷன்ஸ்

வில்லிவாக்கம், சென்னை - 600 049 விலை: ரூ.275

தொடர்புக்கு: 044-2650 7131/94440 47790

**

- தொகுப்பு: கோபால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x