Published : 05 Mar 2016 09:40 AM
Last Updated : 05 Mar 2016 09:40 AM

திருச்சி புத்தக விழா: தேவையும், தன்னிறைவும்

>> பேருந்து வசதி வேண்டும்! கரூர், கோவை வழித்தடத்தில் வரக்கூடிய புறநகர்ப் பேருந்துகள் மட்டுமே, புத்தகக் காட்சி நடைபெறும் இடத்துக்கு அருகிலேயே நின்று செல்கின்றன. ஆனால், நகரப் பேருந்துகளில் வருவோர் நீதிமன்றம், அரசு மருத்துவமனை, கே.எம்.சி மருத்துவமனை, தில்லைநகர் 11-வது கிராஸ் சந்திப்பு ஆகிய ஏதேனும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 2 கி.மீ தூரம்வரை நடந்துசென்று, வளாகத்தை அடைய வேண்டிய சூழல் உள்ளது. இதனால் முதியவர்கள், பெண்கள், வெளியூர்க்காரர்கள் சிரமத்துக்குள்ளாகியிருக்கிறார்கள்.

இதைத் தவிர்க்க, புத்தகக் காட்சி முடியும்வரை சில நகரப் பேருந்துகளையாவது புத்தக க்காட்சி நடக்கும் இடத்தின் வழியே செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புத்தகக் காதலர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

>>புத்தகக் காட்சியில் சில அரங்கங்களில் மட்டுமே மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதி உள்ளது. நடமாடும் ஏடிஎம் இயந்திரம் இருந்தால், வாசகர்களுக்கு வசதியாக இருக்கும். புத்தகக் காட்சி அருகில் சாஸ்திரி சாலையில் மகாத்மா காந்தி நூற்றாண்டு பள்ளி அருகில் எஸ்.பி.ஐ. ஏடிஎம் உள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ‘பபாசி’ அறிவித்துள்ளது.

>>சென்னை, மதுரை புத்தகக் காட்சிகளைப் போல இங்கும் எழுத்தாளர்கள்-வாசகர்கள் கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்தால் புத்தகக் காட்சி மேலும் களைகட்டும்!

நிறைகள்

>>பத்து புத்தகத் திருவிழாக்களைக் கண்ட மதுரையிலேயே, அரங்குகளுக்கு இடையேயான நடைபாதை 15 அடி அகலத்தில்தான் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், இங்கே 20 அடி அகலத்தில் விசாலமான நடைபாதை அமைக்கப்பட்டிருக்கிறது.

>>கோடைக் காலத்தில் நடைபெறுவதால் காற்றோட்டத்துக்குப் போதிய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

>>தண்ணீர் தாகமா? கவலையே வேண்டாம். மூன்று இடங்களில் குடிநீர் வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x