Published : 10 Apr 2021 05:50 AM
Last Updated : 10 Apr 2021 05:50 AM

வாசகி அனு இம்மானுவேல்

வாசகி அனு இம்மானுவேல்

நடிகைகள் புத்தகம் வாசிப்பது என்பது பெரிய மோஸ்தராகப் பார்க்கப்பட்ட ஒரு காலம் தமிழ்நாட்டில் இருந்தது. இப்போது அப்படி இல்லை. வாசிக்கும் பழக்கம் கொண்ட நடிகைகளைக் காண்பது மிகவும் அபூர்வமாகத்தான் இருக்கிறது. அந்த அபூர்வங்களுள் ஒருவர் அனு இம்மானுவேல். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கரான இவர், மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என வலம்வருகிறார். ‘துப்பறிவாளன்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படங்கள் வழியாகத் தமிழர்களுக்கு அறிமுகமான அனு இம்மானுவேல், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வாசிக்கும் புத்தகங்களைப் பற்றியும் பதிவிடுவது வழக்கம். புத்தகங்களைப் பற்றி ஓரிரு வரிகளையோ அல்லது புத்தகத்திலிருந்து தனக்குப் பிடித்த வரிகளையோ எழுதும் இவருக்கு ரசிகர்கள் போக கொஞ்சம்போல வாசகர்களும் உண்டு.

சென்னை, நாகர்கோவில், தூத்துக்குடியில் புத்தகக்காட்சி

சென்னை: பள்ளிக்கரணை பஞ்சமி வாராஹி கோயில் வளாகத்திலுள்ள எஸ்.எஸ்.மஹாலில் ஏப்ரல் 21 வரை புத்தகக்காட்சி நடக்கிறது. தொடர்புக்கு: 98843 55516

நாகர்கோவில்: மக்கள் வாசிப்பு இயக்கமும், முன்னேற்றப் பதிப்பகமும் இணைந்து நடத்தும் புத்தகக்காட்சியானது கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள வருவாய்த் துறை அலுவலர் கட்டிடத்தில் ஏப்ரல் 15 வரை நடக்கிறது. தொடர்புக்கு: 88257 55682

தூத்துக்குடி: மீனாட்சி புக் ஷாப் நடத்தும் புத்தகக்காட்சியானது பாளையங்கோட்டை சாலையிலுள்ள ராமையா மஹாலில் ஏப்ரல் 23 வரை நடக்கிறது. தொடர்புக்கு: 94432 62763

எல்லாப் புத்தகக்காட்சிகளிலும் 10% தள்ளுபடி உண்டு. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் இங்கே கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x