Published : 23 May 2020 07:28 AM
Last Updated : 23 May 2020 07:28 AM

90 வயது கதைசொல்லி

தொண்ணூறு வயதை நெருங்கிக்கொண்டி ருக்கும் டி.எஸ்.நாகராஜன், சுறுசுறுப்பின் விளக்கம். நாள்தோறும் நான்கு மைல் நடை, யோகா. பாவைகளை இயக்குவது, புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக்கொள்வது, பூவேலை செய்வது, அண்மையில் கல்லூரிப் படிப்பை முடித்த பேரனிடம் பைதான் மென்பொருளைக் கற்றுக்கொள்வது எனப் பல்கலை வித்தகர். கர்னாடக இசையில் மிக நுணுக்கமான செவி இவருக்கு உண்டு. இவர் ஒரு ‘மல்டிடாஸ்க’ரும்கூட.

ஒரே நேரத்தில் தொலைக்காட்சியில் டென்னிஸ் பார்த்துக்கொண்டு, மடிக்கணினியில் கச்சேரி கேட்டுக்கொண்டு அவருக்குப் பிடித்த பி.ஜி.வோடௌஸின் புத்தகமும் படிப்பார். வருடக்கணக்காக உலகின் பல மொழிகளிலிருந்து குழந்தைகளுக்கான கதைகளைத் திரட்டி வைத்திருக்கிறார். அவற்றைத் தமிழில் இப்போது ‘ஐங்கரனின் கதைகள்’ என்ற தலைப்பில் ‘பாட்காஸ்டு’களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். மிக சுவாரஸ்யமான கதைகள். கதை கேட்பதற்கான சுட்டி: https://radiopublic.com/-G4QxlX

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x