Published : 10 Jan 2019 08:52 AM
Last Updated : 10 Jan 2019 08:52 AM

இது புதுசு

குழந்தைகள் ஆர்வத்தோடு பாடம் கற்கும் விதமாகப் புதிய செல்போன் செயலியை உருவாக்கியிருக்கிறார்கள் நுட்பம் (I அரங்கு) அரங்கினர். விண்வெளி, உடல் உறுப்புகள், விலங்கினங்கள், நிறங்கள் எனப் புத்தகங்களிலுள்ள விஷயங்கள் இந்த செல்போன் செயலி மூலமாக முப்பரிமாணத் தோற்றத்தில் கண் முன் விரிகிறது. உதாரணமாக, சூரிய குடும்பம் எப்படிச் சுழல்கிறது என்பதை ஒரு காணொலிக் காட்சிபோல குழந்தைகளுக்குக் காட்ட முடியும். இந்தக் காட்சிக்குப் பின்னணியில் இருப்பதோ நிஜ உலகம். இந்த அம்சம் சுவாரசியமூட்டுகிறது. புத்தகத்தில் குழந்தைகள் தீட்டும் வண்ணங்களுக்கேற்ப செயலியிலும் வண்ணங்கள் மாறுகின்றன. போலவே, ‘விர்ச்சுவல் ரியாலிடி கிட்’ மூலமாகத் திரையரங்கில் சினிமா பார்ப்பதுபோல பாடம் கற்றுக்கொள்ளலாம். முதல் வரிசையில் உட்கார்ந்தும் படம் பார்க்கலாம்; கடைசி வரிசையில் உட்கார்ந்தும் படம் பார்க்கலாம். இது ஒரு மாயம்போல நிகழ்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x