Published : 19 Jan 2019 10:21 AM
Last Updated : 19 Jan 2019 10:21 AM

இந்திய சாகித்ய அகாடமி இனி செய்ய வேண்டியது...

இதுவரை ஆண்டுக்கு ஒரு தலைப்புக்கு ஒரு பரிசு என்றே இருந்தது. இதன் விளைவு பல குறைபாடுகள் ஏற்படக் காரணங்கள் ஆயின. எடுத்துக்காட்டாக, நாடறிந்த பெருங்கவிஞர் ஒருவருக்குக் கவிதைக்குப் பரிசு தராமல் நாவலுக்கும் இன்னொரு பெருங்கொண்ட கவிஞருக்கு அவர் எழுதிய நாடகத்துக்குப் பரிசு தருவதுமாக இருந்துவந்தன. அவர்கள் அதை வாங்க மறுத்து நாங்கள் கவிஞர்கள் என்று சொல்லி இருக்கலாம். முடிந்துபோன விஷயங்களை இனி நினைத்துப் பயன் இல்லை.

இதை மாற்ற முடியும். ஆண்டு ஒன்றுக்குப் பல தலைப்புகளுக்குப் பல பரிசுகள் தரலாம். எடுத்துக்காட்டாக, நாவல், கதைகள், கட்டுரைகள், விமர்சன நூல், நாடகங்கள், சிறுவர் இலக்கியம் மற்றும் பதிவுகள், மொழிபெயர்ப்பு இப்படி, இப்படி. சாகித்ய அகாடமி நிறுவனத்தை உண்டாக்கும்போதே பண்டித நேரு அவர்கள் சொன்னபடியே இந்த நிறுவனத்துக்குக் காரியக் கமிட்டி கிடையாது. பொதுக் குழுதான் காரியக் கமிட்டி!

மேலே - முதலில் - சொன்ன மனக்குறைகள் எல்லா மொழிப் படைப்பாளர்களுக்கும் உண்டு என்பதால் தீர்மானம் சுலபமாக நிறைவேற்றப்படும் என்று நம்பலாம். நிதிப் பற்றாக்குறை என்பதே சாகித்ய அகாடமிக்குக் கிடையாது. அது அப்படி ஒரு காமதேனு! முயல வேண்டும்.

- கி.ராஜநாராயணன், புதுச்சேரி.

படம்: புதுவை இளவேனில்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x