Published : 10 Jan 2019 08:51 AM
Last Updated : 10 Jan 2019 08:51 AM

நான் என்னென்ன வாங்கினேன்?

வழக்கறிஞர் கே.எடிசன் தனது தங்கையோடும் மகனோடும் புத்தகங்கள் வேட்டையாடிக்கொண் டிருந்தார். எடிசனிடம் பேசியபோது, “சின்ன வயசுலருந்தே சமூகப் புரட்சி சார்ந்த புத்தகங்கள் வாசிக்கப் புடிக்கும். என் பையனுக்கும் வாசிப்புலகத்தை அறிமுகப்படுத்தினேன். அவன் என்ன விட ஆர்வமா இப்போ புத்தகம் வாசிக்குறதப் பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றவர், “கார்கியின் ‘தாய்’, மார்க்ஸியம் இன்றும் என்றும், நம்மாழ்வார் புத்தகங்கள் வாங்கினேன்” என்றார். அவரது மகன் பியோ, “என் அப்பா எனக்குப் புத்தகம் வாங்கிக்கொடுத்துருக்காங்க. அதுபோக, என் இஷ்டத்துக்கும் புத்தகம் வாங்கியிருக்கேன். இயல்வாகை, தும்பி, பூவுலகின் நண்பர்கள் அரங்குகள்ல இருந்து புத்தகம் வாங்கினேன். கலையரசனின் ‘நாம் கருப்பர் (நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா)’, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘பறந்து திரியும் ஆடு’, கி.வெங்கட்ராமனின் ‘உணவு - உழவு எதிர்காலம்’, டீன் குட்வினின் ‘புவி வெப்பமயமாதல்’; இந்தப் புத்தகங்களெல்லாம் நானா பாத்து வாங்கினேன்” என்று பெருமிதம்கொள்கிறார் பியோ.

- ஜான்சி ராணி அப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x