Published : 19 Aug 2018 11:17 AM
Last Updated : 19 Aug 2018 11:17 AM

60 கலைஞர்கள் பங்கேற்கும் ‘ராமாயணம்’ நாடகம்

கர்ணன் நாடகத்துக்குப் பிறகு, 50 ஆண்டுகள் கழித்து ‘ராமாயணம்’ நாடகத்தை தியாக பிரம்ம கான சபாவின் ஆதரவோடு தயாரித்து வழங்குகிறது கூல் ஈவென்ட்ஸ் நிறுவனம். அதன் தயாரிப்பாளர் ஆர்.எஸ்.குமார் இந்த நாடகம் குறித்து கூறியதாவது:

உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி களின் வழிநடத்துதலுடன் ‘ராமாயணம்’ நாடகத்தை தயாரித்துள்ளோம். சென்னை தவிர மும்பை, பெங்களூரு, டெல்லியிலும் இதை அரங்கேற்ற இருக்கிறோம்.

நாடகமாக்கம் மற்றும் வசனத்தை கவிஞர் பூவை தயா செய்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’, ‘கர்ணன்’, ‘மாவீரன் மருதநாயகம்’ போன்ற நாடகங்களின் மூலமாக அறியப்பட்ட குட்டி, இந்த நாடகத்தில் ராமன் கதாபாத்திரம் ஏற்றிருப்பதுடன், நாடகத்தை இயக்கும் பொறுப்பும் வகிக்கிறார்.

ஏறக்குறைய 60-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் உழைப்பில் ‘ராமாயணம்’ நாடகம் உருவாகியுள்ளது. புராண பாத்திரங்களை முதன்மைப்படுத்தி நிறைய நாடகங்கள் அரங்கேறி உள்ளன. ஆனால், நாடகத் துறையில் பல புதுமைகளைப் புகுத்திய நவாப் ராஜமாணிக்கத்துக்குப் பிறகு, முழுமையாக ஒரு புராணத்தையே மேடையேற்றும் சிறப்பும் இன்று (19-ம் தேதி) வாணி மகாலில் நடக்க இருக்கும் ‘ராமாயணம்’ நாடகத்துக்கு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x