Published : 26 May 2018 09:46 AM
Last Updated : 26 May 2018 09:46 AM

பிறமொழி நூலகம்: ராமராஜ்யமும் மக்கள் நலனும்

ன்றைய வாழ்வில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றிபெறுகின்றன என்பது குறித்த ஆய்வு மிக முக்கியமானதாக அமைகிறது. இத்தகைய ஆய்வுகளே அரசின் எதிர்காலத் திட்டங்களுக்கும் வழிவகுக்கும். அவ்வகையில், மக்கள் நல அரசின் இலக்கணத்தை ராமராஜ்யம் என்ற கருத்தாக்கத்தின் மூலம் பொருத்திப்பார்ப்பதில் வெற்றிபெற்றிருக்கிறார் ஜக்மோகன் சிங் ராஜு. இந்திய ஆட்சிப் பணி அலுவலரான ராஜு, தன்முனைவர் பட்டத்துக்காக மேற்கொண்ட ஆய்வுதான் நூலாக வெளிவந்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்குள் ராமராஜ்யம் என்ற மக்கள் நல அரசை பொருத்திப்பார்ப்பதன் சாத்தியப்பாடுகளை முன்வைக்கிறது. விரிவான தரவுகளின் மூலம் இதற்குக் கிடைக்கும் விடை என்னவெனில், சமூக நீதியை நிலைநாட்டுவதன் மூலமே மக்கள் நல அரசின் நோக்கங்களை நிறைவேற்றி அதை ராமராஜ்யமாக உருவாக்க முடியும் என்பதுதான். அவ்வகையில், தமிழ்நாட்டைப் பின்புலமாகக் கொண்டு நூலாசிரியர் முன்வைக்கும் கருத்து கவனிக்கத்தக்க ஒன்று. தமிழ்நாட்டின் சமூக முன்னேற்றத்தை விரிவான தரவுகளின் மூலம் நிறுவும் நூலாக இதைக் கூறலாம்.

- வீ. பா. கணேசன்

ராமராஜ்யா: த பீப்பிள்ஸ் வெல்ஃபேர் ஸ்டேட்

ஜக்மோகன் சிங் ராஜு

எக்செல் புக்ஸ், புதுதில்லி – 110 049

விலை: ரூ. 799

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x