Published : 07 Apr 2018 09:43 AM
Last Updated : 07 Apr 2018 09:43 AM

நல் வரவு: உச்சி சூரியனில் முளைக்கும் பனை

உச்சி சூரியனில் முளைக்கும் பனை | திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

விலை:ரூ.60, வெற்றிமொழி வெளியீட்டகம்,

திண்டுக்கல்-624001

நவீன ஓவியராக அறியப்பட்டவரின் நான்காவது கவிதை நூல். கவிதை மொழிக்கான மெனக்கெடல்கள் ஏதுமின்றி, அச்சு அசலான வாழ்க்கையை தனது இயல்பானமொழியில் கவிதையாக்கியுள்ளார். மாட்டுக்கறி சுமந்து செல்லும் அம்மாவும், மலமள்ளிய வாடையை விரட்ட மதுவாடையோடு குழந்தையைக் கொஞ்சும் அப்பாக்களும் நம்மை நெஞ்சோடு சேர்த்தணைத்து நெகிழ வைக்கிறார்கள்.

 

சைவ வைணவப் போராட்டங்கள் | சிகரம் ச.செந்தில்நாதன்

விலை:ரூ.165, சந்தியா பதிப்பகம்,சென்னை-600083

044-24896979

இந்தியாவின் பிற மொழிகளில் வடமொழி வேதத்தின் செல்வாக்கு மிகுந்திருப்பதுபோல் தமிழில் இல்லாமைக்கு காரணம், இங்கே சைவ, வைணவ சமயங்களும் அவற்றின் வழியாக கிடைக்கப்பெற்ற சமய இலக்கியங்களும்தான். சங்க காலம் தொடங்கி, சைவ – வைணவ சமயங்களின் செல்வாக்கு குறித்தும், நாயக்கர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியில் இவ்விரு சமயங்களின் நிலை குறித்தும் விரிவாக ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ளது.

 

கரிசல் மனிதர்கள் | கி.ரா.பிரபாகர்

விலை:ரூ.100, அட்சரம் பதிப்பகம், பல்லடம்-641667

9159659788

முதுபெரும் எழுத்தாளர் கி.ரா-வின் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் எழுத்தாளரின் முதல் தொகுப்பு. மூன்று குறு நாவல்கள். ‘பேதலிப்பு’ கதையில் வரும் முத்தேலுவும், ‘அருவாமனை’ கதையில் வரும் முத்துக்கோனார்- ஒடையம்மாவும் நம் மனதில் பதிந்துபோகும் கதாமாந்தர்கள். வட்டார வழக்கிலேயே சரசரவென நம்மை இழுத்துக்கொண்டோடும் மொழிநடைக்கு ஒரு சபாஷ் போடலாம்.

 

பன்முகன் | சந்திரா மனோகரன்

விலை:ரூ.180, காவ்யா வெளியீடு, சென்னை-600024

9840480232

கவிதை, கட்டுரை, நாவல், சிறுவர் இலக்கியம், விளையாட்டு, மொழிபெயர்ப்பு பணிகளோடு சிற்றிதழாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் நூலாசிரியரின் 25-ஆவது நூலிது. இதிலுள்ள 24 கதைகளிலும் வரும் சாதாரண மனிதர்கள், எல்லாச் சோதனைகளிலிருந்தும் தன்னம்பிக்கையோடு மீண்டெழுந்து சாதனை மனிதர்களாக தடம் பதிக்கிறார்கள்.

தொகுப்பு: மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x