Published : 07 Apr 2018 09:44 AM
Last Updated : 07 Apr 2018 09:44 AM

பிறமொழி நூலறிமுகம்: இசை தேவதை எம்.எஸ்.

இந்திய இசை உலகில் தனிப்பெரும் இடத்தைப் பெற்று, சக இசைக் கலைஞர்களாலேயே ‘சுஸ்வரலஷ்மி’ என்றும், ‘எட்டாவது ஸ்வரம்’ என்றும் பாராட்டப்பட்ட மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி(எம்.எஸ்.) பல வகையிலும் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர். மூத்த பத்திரிகையாளரும், இதழியல் கல்வியின் முன்னோடியுமான டி.ஜே.எஸ். ஜார்ஜ் இந்த மாபெரும் கலைஞரின் அதிகாரபூர்வமான வாழ்க்கை சரிதத்தை நமக்கு அளித்துள்ளார்.

மதுரை நகரில் சின்னஞ்சிறுமியாக இசைத்தட்டுக்களை வழங்குபவராக வாழ்க்கையைத் துவங்கி, பாடல்களுக்கும் வித்தியாசமான இசைக்கும் புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்து, பின்னர் மாபெரும் இசைக் கலைஞராக கர்நாடக இசையுலகில் பவனி வந்த எம்.எஸ். தன்னளவில் எளிமையானவராக, கொடைவள்ளலாக விளங்கிய வரலாற்றை ஜார்ஜ் நமக்கு முழுமையாக வழங்கியுள்ளார். அவரது சக கலைஞர்கள், நெருங்கிய உறவினர்கள், உதவியாளர்கள் என அனைவரிடமிருந்தும் எம்.எஸ்.ஸின் பண்பியல்புகளை, சிறு சிறு நிகழ்வுகளைக் கேட்டு, அவற்றை தவறவிடாமல் பதிவு செய்துள்ள இந்நூல் அடுத்த தலைமுறையினருக்கு இந்த இசை தேவதையை அறிமுகம் செய்வதாக அமைகிறது.

எம்.எஸ். சுப்புலட்சுமி, - த டெஃபினிடிவ் பயாக்ரஃபி,

டி.ஜே.எஸ். ஜார்ஜ், அலெப்,

புதுடெல்லி-110 002.

விலை: ரூ. 399/-

- வீ. பா. கணேசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x