Published : 02 Dec 2017 10:43 AM
Last Updated : 02 Dec 2017 10:43 AM

பரணி வாசம்: கூவநூல் படித்திருக்கிறீர்களா?

கூவ நூல் என்றவுடன், நானும் உங்களைப் போலவே, சென்னையில் உள்ள கூவம் ஆற்றைப் பற்றிய நூல் என்றே நினைத்தேன், எழுத்தாளர் வெள் உவனின் நூலைப் படிக்கும் வரை.

பழந்தமிழர்களுக்கு நீர் மேலாண்மையில் மிகுந்த அக்கறை உண்டு. விவசாயப் பாசனத்துக்கு ஏரி, குளம், ஆறு மட்டுமன்றி, கிணற்றுக்கும் பங்கு உண்டு. அந்தக் கிணற்றை எப்படித் தோண்ட வேண்டும், என்ன ஆழத்தில் தோண்ட வேண்டும் உள்ளிட்ட விவரங்களைச் சொல்லும் சாஸ்திர நூலே கூவ நூல். ஒரு விவசாயி கிணறு தோண்ட வேண்டும் எனில், கிணறு தோண்டுபவருடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும். சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒரு ஒப்பந்தம் பற்றி வெள் உவன் குறிப்பிடுகிறார்.

அதில், வெட்டப்பட வேண்டிய கிணற்றின் அளவு கொடுக்கப்பட்டுள்ளது. கீழமேல் 7 கஜம்,தென்வடல் 11 கஜம் என்றும் அளவுகள் உள்ளன. கிணறு வெட்டுவதைப் பற்றி மட்டும் அல்ல, அதற்கான கூலி குறித்தும் பேசுகிறது. ஒரு கஜ ஆழம் தணிப்பதற்கு, கஜம் ஒன்று ரூபாய் இரண்டு எனவும், ஏழு கஜ ஆழத்துக்குப் பின் தோண்டக்கூடிய ஒவ்வொரு அரை கஜத்துக்கும் ரூபாய் இரண்டேகால் எனவும் சம்பளம் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கிறார் வெள் உவன்.

இது போலவே, திருமணத் தாம்பூலப் பைகளில் கடலை மிட்டாய் போடுவதன் காரணம், திருமண வீடுகளில் 101 , 501 என்று மொய் செய்வதில் ‘ஒண்ணு’ என்பது எப்படி வந்தது?, கோயில் கொடை விழாக்களில் குருத்தோலைக்கிளி என்ற தோரணத்தை ஏன் கட்டுகிறார்கள்? என்பதையெல்லாம் பற்றிய 44 கட்டுரைகளில் பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி சுவாரசியமாக தருகிறார் எழுத்தாளர் வெள் உவன்.

தொடர்புக்கு: narumpu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x