Published : 25 Mar 2023 04:04 PM
Last Updated : 25 Mar 2023 04:04 PM

இண்டிகோ விமானத்தில் 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' தம்பதியரை பாராட்டிய சக பயணிகள்: வைரல் வீடியோ

பொம்மன் - பெள்ளி தம்பதியர் | கோப்புப்படம்

கோவை: ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தின் நாயகர்களாக அறியப்படும் பொம்மன், பெள்ளி தம்பதியர் இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளனர். அந்தப் பயணத்தின்போது காட்டின் பேர் உயிர் என அறியப்படும் யானையை பாதுகாத்து வளர்க்கும் அவர்களது பணிக்காக விமான கேப்டன் மற்றும் குழுவினர், சக பயணிகள் என அனைவரும் அவர்களைப் பாராட்டி உள்ளனர்.

அந்த வீடியோவை தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு ஐஏஎஸ் பகிர்ந்துள்ளார். அது பரவலாக கவனம் பெற்று வருகிறது. அண்மையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தம்பதியரை அழைத்து நிதி உதவி வழங்கி பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெப்பக்காடு யானைகள் முகாமில் ரகு மற்றும் அம்மு என இரண்டு யானை குட்டிகளை பேணிக் காத்தனர் பொம்மன், பெள்ளி தம்பதியர். தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்திலும் அதுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது தர்மன் என்ற பெயரில் தாயை இழந்த குட்டி யானையை இவர்கள் கவனித்து வருகின்றனர்.

இந்த தம்பதியரின் வாழ்க்கை கதை பலருக்கு உத்வேகம் கொடுத்துள்ளது. அதோடு இந்தியாவில் யானைகள் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் பலரையும் ஈர்த்துள்ளது. வனவிலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த ஆவணப்படம் கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x