Published : 30 Dec 2022 08:15 PM
Last Updated : 30 Dec 2022 08:15 PM

மோசமான முறையில் இசைக்கருவியை கையாண்ட இண்டிகோ: விரக்தியில் வீடியோவை பகிர்ந்த பாடகர்

இண்டிகோ ஊழியர் பேகேஜை கையாளும் வீடியோ ஸ்க்ரீன் ஷாட்

புதுடெல்லி: இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மோசமான முறையில் தனது இசைக்கருவிகளை கையாண்ட வீடியோவை வெளியிட்டு தனது விரக்தியை பாடகர் பிஸ்மில் தெரிவித்துள்ளார். தங்கள் எக்ஸ்ட்ரா பேகேஜுக்கு கூடுதலாக 30,000 ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது சமூக வலைதள பயனர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

“இப்படித்தான் எங்கள் கருவிகளை இண்டிகோ கையாண்டுள்ளது. ஒவ்வொரு கலைஞனுக்கும் தனது கருவிகள் விலைமதிப்பற்றது. ஆனால், இண்டிகோ அதனை குப்பையை போல எரிவது வேதனை கொடுக்கிறது.

எங்கள் இசைக்கருவிகளை கவனமாக கையாளுங்கள் என சொல்லி இருந்தோம். அதோடு எக்ஸ்ட்ரா பேகேஜுகளுக்கு கூடுதலாக 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி இருந்தோம். அதனால் தன்னைப் போன்ற சக கலைஞர்கள் தங்களது கருவிகளை இண்டிகோ வசம் கொடுக்கும் போது கவனமாக இருக்கவும்” என அவர் சொல்லியுள்ளார்.

பயணிகளின் பேகேஜை மோசமாக கையாளும் இண்டிகோ ஊழியரின் இந்த வீடியோ சுமார் 30 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது. பயனர்கள் பலரும் பல்வேறு தருணங்களில் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுடன் தாங்கள் சந்தித்த கசப்பான நினைவுகளை இதில் பகிர்ந்துள்ளனர். இந்த சூழலில் இண்டிகோ தரப்பில் இதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

“அந்த வீடியோவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பேகேஜ் பத்திரமாக அது சென்று சேர வேண்டிய இடத்தில் உரியவர் வசம் சென்றுள்ளது. அந்த பேகேஜுக்கு சேதாரம் ஏதும் இல்லை என சொல்லப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தங்கள் தரப்பில் விசாரித்து வருவதாகவும். தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் இண்டிகோ தெரிவித்துள்ளது.

A post shared by Bismil (@bismil.live)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x