Last Updated : 06 Nov, 2023 03:25 PM

 

Published : 06 Nov 2023 03:25 PM
Last Updated : 06 Nov 2023 03:25 PM

விழுப்புரம் 30 | போக்குவரத்து நெருக்கடியால் திக்கித் திணறும் என்.எச்.45 - ரேடார் கேமராவில் கண்காணிக்க திட்டம்

விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, கடந்த 1993-ம் ஆண்டு செப். 30-ம் தேதி பிரிந்து புதிய மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உருவானது. 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், கடந்த 29 ஆண்டுகளில் இம் மாவட்டம் பெற்றது என்ன..? பெறத் தவறியது என்ன..? என்பது குறித்து நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்தவகையில் இன்றையை தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது நிலவும் போக்குவரத்து நெருக்கடி, அதை கையாளும் காவல்துறை பணி குறித்து பதிவிடுகிறோம்.

வார இறுதி நாட்களில் விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட விக்கிரவாண்டி டோல் கேட் தொடங்கி நெடுஞ்சாலைகளில் பல இடங் களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சமயங்களில் சென்னைக்கு செல்லும் வாக னங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது. இதை சரி செய்யஒவ்வொரு முறையும் போக்குவரத்து காவல் துறையினர் திக்கித்திணறி வருகின்றனர். சாலை விபத்துகளை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது விழுப்புரம் மாவட்டத்தில் சற்றே குறைந்திருக்கிறது.சாலை விபத்துகளைத் தடுக்க, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்டு விபத்து பகுதிகளை ‘ப்ளாக் ஸ்பாட்’ என்று வரையறைத்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள என்.எச் - 45 சாலையில் இதுபோல் 117 இடங்களை விபத்து நடக்கும் ‘ப்ளாக் ஸ்பாட்’ இடங்களாக கண்டறிந்து, அதிகபட்சம் மணிக்கு 80 கி.மீட்டருக்குள் செல்லக் கூடாது என்று கடந்த 20.12.2017 அன்று, விழுப்புரம் மாவட்ட நிர்வா கம் அறிவிப்பு வெளியிட்டது. அந்தப் பகுதிகள் கூடுதல் கண்காணிப்பில் இருந்து வருகிறது. உளுந்தூர்பேட்டை தொடங்கி மாவட்ட எல்லையான ஓங்கூர் வரையில் அதிக அளவில்விபத்துகள் நடைபெறுகின்றன. இந்த விபத்துக ளில் அதிகம் சிக்குவது ஆம்னி பேருந்துகளே.

இது குறித்து வட்டார போக்குவரத்து அலு வலக வட்டாரங்களில் கேட்டபோது, “விழுப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதற்கு காரணம் அதிவேகம். நெடுஞ்சாலையில் செல்லும் போது வாகனத்தின் கதவுகளை முழுவதுமாக அடைத்து விட்டு, ஏசியை போட்டுக் கொண்டு செல்லும்போது, வேகத்தை முழுமையாக உணர முடியாது. 100 கி.மீ வேகத்துக்கும் மேல் செல்லும்போது கூட சாதாரணமாகவே தெரியும். இதனைத்தான் ‘Speed blindness’ என்று கூறுகின்றனர். மேலும், முன்பின் செல்லும்வாகனங்களின் வேகமும் உங்களது வாகனமும் ஒரே வேகத்தில் செல்வதால் உங்கள் வாகனத் தின் வேகத்தை உணர முடியாமல் மெதுவாக செல்வது போன்ற மாயையை மூளைக்கு ஏற்படுத்தி விடும்.

அவசரத்தில் திடீரென பிரேக் பிடித்தால் கூட அது பயனளிக்காது. உதாரணமாக, 80 கி.மீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் குறைந்தது 28.11 மீட்டர் தூரத்தில்தான் வாகனம் நிற்கும். இதற்கு 2.59 விநாடிகள் ஆகும். இதுவே 100 கி.மீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் 54.33 மீட்டர் தூரத்தில்தான் வாகனம் நிற்கும். இதற்கு 3.73 விநாடிகள் ஆகும். இது சாலை நிலைகளை பொறுத்து மாறும். சில வேளை சாலையில் மணல் படர்ந்திருந்தால் இந்த தூரம் மேலும் அதிகரிக்கும். மேலும் வாகனத்தின் எடையை பொறுத்தும் இந்த தூரம் மாறுபடும்.

நம் நாட்டில் நெடுஞ்சாலைகளில் மிக அதிகபட்சமாக 90கி.மீ வேகத்தில் செல்வது கூடுதல் பாதுகாப்பு. கவனிக்க..! மிக அதிகபட் சமாகதான், அதுவும் நெருக்கடியற்ற நெடுஞ்சாலையில் தான் இந்த வேகம். பொது வாக சாலையின் போக்குவரத்து நிலையைபொறுத்தே நம் வேகம் இருக்க வேண்டும். மேலும், இந்த ‘ஸ்பீடு பிளைன்ட்னஸ்’ வராமல் இருக்க, அடிக்கடி ஸ்பீடோ மீட்டரிலும் ஒரு கண் வைக்க வேண்டும் என்று தெரிவிக் கின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 501 பேர் இறந்துள்ளனர். 1,620 பேர் காயமடைந்துள்ளனர். 2,121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 558 பேர் இறந்துள்ளனர். 1,832 பேர் காயமடைந்துள்ளனர். 2.390 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் அக்டோபர் வரை 413 பேர் இறந்துள்ளனர்.1,782 பேர் காயமடைந்துள்ளனர். 2,195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரேடார் கேமரா அமைக்கப்பட்டுவிட்டால் விபத்துகள் குறையும். போக்குவரத்து போலீஸாரால் அடுத்து வரும் டோல் கேட்டில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரிடம் அதிவேகத்துக்கான அபராதம், மற்றும் வழக்கு தொடர்பான விவரம் உள்ள நோட்டீஸ் வழங்கப்படும். உதாரணமாக உளுந்தூர்பேட்டையை கடந்து அதிவேகமாக வரும் வாகனத்துக்கான நோட்டீஸ் விக்கிரவாண்டி டோல்கேட்டில் வழங்கப்படும். இதன் மூலம் அதிவேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்து, விபத்துகள் கட்டுப்படுத்தப்படும்” என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

‘விழுப்புரம் மாவட்டத்தில் அதிக வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’ என்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்க் சாயிடம் கேட்டபோது, “தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகம் செல்லும் வாகனங் களின் பதிவெண்ணை படம் பிடிக்கும் ரேடார் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ் சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை என 470 கி.மீ உள்ளது. ரேடார் கேமரா அமைக்க ரூ 4 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் என கண்டறியப்பட்ட 117 ‘ப்ளாக் ஸ்பாட்’ இடங்களில் 89 இடங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.

குடித்து விட்டு வாகனம் ஓட்டும் வழக்குகள் நடப்பாண்டில் இதுவரையில் கடந்த ஆண்டை விட ஒன்றரை மடங்கு அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கின் கீழ் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். குடித்து விட்டு வண்டி ஓட்டுவோரிடம் கூடுதல் கெடுபிடி காட்டுகிறோம். தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க முடியாது. ஆனால் வேகத்தை கட்டுப் படுத்த சாலை சந்திப்பு பகுதிகளில் பேரிகார்டு அமைக்கலாம். சாலை பாதுகாப்பு நிதியில் 75 பேரிகார்டுகள் போடப்பட்டுள்ளன. மேலும், தனியார் நிறுவன பங்களிப்பில் பேரிகார்டுகள் போடப்பட்டு வருகின்றன”என்றார்.

காவல்துறை கூறும் இந்த புள்ளி விவரங் களைத் தாண்டி, நாளுக்கு நாள் வாகனங்களின் அதிகரிப்பும், அதனால் ஏற்படும் விபத்துகளும் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்தபடியே இருக்கின்றன. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான வழியில் நமது விழுப்புரம் மாவட்டம் இருப்பதால் இந்தபோக்குவரத்து நெருக்கடி தவிர்க்க முடியாத தாக ஆகியிருக்கிறது.

பண்டிகை விடுமுறை நாட்களைத் தாண்டி, வார இறுதியில் கூட வெளியூர்களுக்கு அதிகமாக பயணிக்கும் மனபாங்கு அதிக ரித்துள்ளதும் இந்த போக்குவரத்து நெருக் கடிக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்றும் விழுப்புரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த நெருக்கடியான சூழலில், சாலை விதிகளை சரியே கடைபிடித்து கூடுதல் பொறுப்புடன் நாம் நடந்து கொள்ள வேண்டி யது மிக அவசியமாகிறது. இதுபோன்ற விழுப்புரம் மாவட்டத்தின் வளர்ச்சி, பாதிப்புகள் குறித்து அடுத்தடுத்த நாட்களில்.

முந்தைய அத்தியாயம் > விழுப்புரம் 30 | போக்ஸோ சட்டமும், சிறார் மீதான பாலியல் அத்துமீறலும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x