உ.பி.யில் வரதட்சணை கொடுமை​யால் பெண் தற்கொலை

உ.பி.யில் வரதட்சணை கொடுமை​யால் பெண் தற்கொலை
Updated on
1 min read

உத்தர பிரதேசத்​தின் கிரேட்​டர் நொய்டா பகு​தியை சேர்ந்​தவர் தீபிகா (25). இவருக்​கும் அதே பகு​தியை சேர்ந்த ரித்​திக் தன்வாருக்கும் கடந்த 2024 டிசம்​பரில் திரு​மணம் நடை​பெற்​றது. திரு​மணத்தின்​போது பெண் வீட்​டார் தரப்​பில் ரூ.1 கோடிக்​கும் அதி​க​மாக செல​விடப்​பட்​டது. குறிப்​பாக மணமக​னுக்கு ரூ.11 லட்சம் ரொக்​கம், ஒரு ஸ்கார்​பியோ கார் ஆகியவை வழங்கப்பட்டன.

ஆனால் திரு​மணத்​துக்கு பிறகு கணவர் வீட்​டார் வரதட்​சணை கேட்டு தீபி​காவை தொடர்ந்து கொடுமைப்​படுத்தி வந்​தனர். ரூ.60 லட்​சம் மதிப்​புள்ள விலை உயர்ந்த கார், ரூ.51 லட்​சத்தை ரொக்கமாக தர வேண்​டும் என்று வலி​யுறுத்​தினர். இந்த சூழலில் நேற்று முன்​தினம் கிரேட் நொய்​டா​வில் உள்ள கணவரின் வீட்​டின் மாடியில் இருந்து தீபிகா கீழே குதித்​தார்.

இதில் அவர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். இதுகுறித்து போலீ​ஸார் வழக்குபதிவு செய்து கணவர் ரித்​திக் தன்​வார், அவரது தந்தை மனோஜ் ஆகியோரை கைது செய்​தனர். இதுதொடர்​பாக தீபி​கா​வின் தந்தை தீபக் நராங் கூறும்​போது, “எனது மகள் மரணத்​தில் மர்​மம் இருக்​கிறது. இது தற்​கொலை​யா,கொலையா என்​பது குறித்து வி​சா​ரிக்க வேண்​டும்.

கணவர் வீட்​டாருக்​கு கடும்​ தண்​டனை வழங்​க வேண்​டும்​’’ என்றார்​. எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல. தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் அதில் இருந்து மீள தொடர்புகொள்ளவும்: மாநில உதவி மைய எண்: 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 - 24640050.

உ.பி.யில் வரதட்சணை கொடுமை​யால் பெண் தற்கொலை
‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ முறையால் மதிப்பெண் குறைகிறதா? - சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பும் பின்புலமும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in