“ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராடுவோம்” - ராகுல் அறிவிப்பு

“ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராடுவோம்” - ராகுல் அறிவிப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி வில​கும் வரை போராடு​வோம் என்று மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி தெரி​வித்​துள்​ளார்.

எஸ்​ஐஆர் விவ​காரம் தொடர்​பாக தலை​மைத் தேர்​தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி இண்​டியா கூட்​டணி தொடர் போராட்​டங்​களை நடத்தி வரு​கிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்​தினம் உச்ச நீதி​மன்​றம் நோக்கி பேரணி நடத்​தப்​பட்​டது. இதன் இறு​தி​யில் எஸ்​ஐஆர் பணிக்கு எதிராக உச்ச நீதி​மன்​றத்​தில் ரிட் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்நிலையில், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தியின் டெல்லி வீட்டில் கூட்​டணி தலை​வர்கள் நேற்று மாலை கூடினர். திரிண​மூல் காங்​கிரஸ், சமாஜ்​வாதி உள்​ளிட்ட கட்சிகளின் மூத்த தலை​வர்​கள் கூட்​டத்​தில் பங்​கேற்​றனர். இண்டியா கூட்​டணி தலை​வர்​களுக்கு ராகுல் காந்தி தேநீர் விருந்து அளித்​தார். இதன் பிறகு கூட்​டணி தலை​வர்​கள் கூட்​டாக நிருபர்​களுக்கு பேட்​டியளித்​தனர்.

அப்​போது காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கூறும்​போது, “பிரதமர் நரேந்​திர மோடி​யின் வாக்​குத் திருட்​டுக்கு எதிராக அனை​வரும் ஒன்​றிணைந்து போராடு​வோம்” என்று தெரிவித்​தார். ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலை​வர் தேஜஸ்வி யாதவ் கூறும்​போது, “பிரதமர் மோடி, அமைச்​சர் அமித் ஷாவின் உத்​தர​வின்​பேரில் ஜனநாயகத்தை அழிக்க ஞானேஷ்கு​மார் முயற்சி செய்​கிறார்” என்று தெரி​வித்​தார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் பொதுச்​ செய​லா​ளர் டி. ராஜா கூறும்​போது, “ஜந்​தர் மந்​தரில் போராட்​டம் நடத்த அனு​மதி மறுப்​பதை வன்மையாகக் கண்​டிக்​கிறோம்” என்று தெரி​வித்​தார்.

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கூறிய​தாவது: மக்​களின் அடிப்​படை உரிமை​களை மத்​திய அரசு பறிக்​கிறது. இதை தடுத்து ஜனநாயகத்தை காப்​பாற்ற ஒன்​றிணைந்து போராடு​கிறோம்.

இது பலமுனை போராட்​டம் கிடை​யாது, ஒற்றை போராட்​டம். தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலக வலி​யுறுத்தி ஒரு​மித்த கருத்​துடன் போராடு​கிறோம். எங்​களது போராட்​டம் ஓயாது. எங்​களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடு​வோம். இவ்​வாறு ராகுல்​ காந்தி தெரிவித்தார்.

“ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராடுவோம்” - ராகுல் அறிவிப்பு
“அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in