“அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

Updated on: 
1 min read

ஈரோடு: அ​தி​முக​வில் இருந்து மேலும்15 பேர் வெளியே வரு​வார்​கள், அவர்​கள் யார் என்​பதை பொறுத்​திருந்து பார்க்க வேண்​டும் என அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார்.

ஈரோடு மாவட்​டம் கோபியை அடுத்த செம்​மாண்​டம்​பாளை​யத்​தில் பகு​திநேர ரேஷன் கடையை வரு​வாய்த்​துறை அமைச்​சர் செங்​கோட்​டையன் திறந்து வைத்​தார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: இன்று அரசுக்கு ரூ.13 லட்​சம் கோடி கடன் உள்ள நிலை​யில், ஒரு நாளைக்கு வட்டி மட்​டுமே ரூ.347 கோடி செலுத்த வேண்​டிய கட்​டா​யத்​தில் அரசு உள்​ளது. இந்த இக்​கட்​டான காலத்​தி​லும் பல்​வேறு நலத்​திட்​டங்​களை அரசு நிறை​வேற்றி வரு​கிறது.

மிக விரை​வில் அதி​முக​வில் இருந்து 15 பேர் வெளியே வர உள்​ளனர். அதி​முகவைச் சேர்ந்த நிர்​வாகி​கள் சிலர் கூட்​டம் கூட்டி பேசி வரு​கின்​ற​னர். இன்று பலரால் தேர்​தல் களத்​தில் நிற்​கக்​கூட முடிய​வில்லை என்​பதே நிஜம். தேர்​தலில் ‘நான் வரு​வேன், நீ வரு​வாய்’ என பேசி​ய​வர்​கள் எல்​லாம் இரண்​டு, மூன்​றாம் இடத்​துக்கு சென்​று​விட்​டனர், நல்​ல​வேளை​யாக அதி​முக​வில் இருந்து பழனி​சாமி என்னை நீக்​கி​னார். அதனால்​தான் தவெக​வில் இணைந்து மக்​கள் பணி​யாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்​துள்​ளது’ என்​றார்.

தொடர்ந்​து, பெருந்​துறை​யில் நடை​பெற்ற நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் நிகழ்​வில் பங்​கேற்ற அமைச்​சர் செங்​கோட்​டைய​னிடம், ‘அதி​முக​வில் இருந்து 15 எம்​எல்​ஏக்​கள் வெளியே வரு​கி​றார்​களா?’ என செய்​தி​யாளர்​கள் கேள்வி எழுப்​பினர். இதற்கு அமைச்​சர் செங்​கோட்​டையன் பதிலளித்து பேசும்​போது,“அ​தி​முக​வில் இருந்து 15 நபர்​கள் வரு​வார்​கள் என்று தான் சொல்​லி​யுள்​ளேன். யார் வரு​வார்​கள் என சொல்​ல​வில்​லை.

செய்​தி​யாளர்​களே கற்​பனை செய்​து​கொண்​டு, எம்​எல்​ஏக்​கள் வரு​கி​றார்​களா என கேட்​கக்​கூ​டாது. யார் வரு​வார்​கள் என்​பதை பொறுத்​திருந்து பார்க்க வேண்​டும். அதி​முக​வில் ஏற்​கெனவே பல பிரச்​சினை​கள் வந்​துள்​ளன. தற்​போது அதி​முக​வில் நடக்​கும் பிரச்​சினையை பழனி​சாமி​யும், வேலுமணி​யும் இணைந்​து​தான் முடி​வெடுக்க வேண்​டும்” என்​றார்​.

<div class="paragraphs"><p>அமைச்சர் செங்கோட்டையன்</p></div>
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் முதல்வர் விஜய் சந்திப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in